ஹிந்து அறநிலையத்துறை ஒரு கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்கும்போது கோயில் நகை, பணம், நிலம், சாமி சிலை உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய மூன்று பதிவேடுகள் தயாரிக்க வேண்டும். இவை ஹிந்து அறநிலையத்துறை அலுவலகம், கோயில், இணை ஆணையர்களின் கட்டுப்பாட்டில் தலா ஒன்று பராமரிக்கப்படும். ஆனால் பல கோயில்களில் இவை மாயமாகியுள்ளன. இதை சாக்கிட்டு பல அதிகாரிகள் கோயிலின் நகை, நிலம் போன்றவற்றை திருடி வருகின்றனர். எனவே இது குறித்து ஆர்.வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை, தொல்லியல்துறை கொண்ட கூட்டு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.