மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஒரு மாபெரும் பாரத சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ். ‘உடனடியாக சுதந்திரம் பெற, நேரடி போர் மட்டுமே ஒரே வழி’ என தீர்மானித்து, ‘இந்திய தேசிய ராணுவத்தை’ உருவாக்கி, பிரிட்டிஷாரை எதிர்த்து போர் தொடுத்தவர். வீட்டுச்சிறையில் கடும் கண்காணிப்பில் இருந்த நேதாஜி, பிரிட்டிஷாரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயணித்து ஆப்கானையும், பின் அங்கிருந்து, பெரும் முயற்சி செய்து ஜெர்மனியையும் அடைந்தார்.

நேதாஜியை காணவில்லை என்று நாடே அல்லோகலப் பட, ஜெர்மானிய வானொலி மூலம் அவர் முழங்க,
உலகமே அதிர்ந்தது. இந்த ஒரு செயல் அவரது தன்னம் பிக்கையை, துணிச்சலை உலகுக்கு பறைசாற்றியது. உலகின் தலை சிறந்த சிறை தப்பித்தல்களில் போஸ் அவர்களுக்கு தனி இடம் என்றுமே உண்டு.

நேதாஜியின் பொன்மொழிகளில் சில:

* தலைவனை தேட முடியாமல் போனாலும் போகட்டும். அதற்காக நீங்கள் உங்கள் காரியத்தை நிறுத்தாதீர்கள். நாளடைவில் நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.
* கலங்காத உள்ளம் படைத்தவர்கள் இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.
* உண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்.
* முதலில் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்ற தகுதி உடையவன்.
* சுதந்திரம் என்பது யாசித்து பெறுவதல்ல. போராடிப் பெறுவது.
பா. சுந்தரலிங்கம், ஆவணி மூல வீதி, பழனி.