மாற்றத்தை காணப்போகும் ஜம்மு காஷ்மீர் – 2020இல் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கும்

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, பொது நீரோட்டத்தில் இணைந்துள்ள காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களில் ஒன்றாக, மெட்ரோ ரயில் சேவையும் கொண்டு வரப்பட உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இதுவரை  370வது பிரிவின் கீழ் சிறந்து அந்தஸ்தை பெற்று வந்தது. அதை பயன்படுத்தி, அங்குள்ள குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சுகபோக வாழ்க்கையில் திளைத்து வந்தனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தனது தேர்தல் வாக்குறுதியின் படி, காஷ்மீருக்கான சிறந்து அந்தஸ்தை நீக்கும் வரலாற்று சிறப்புமிக்க, துணிச்சலான முடிவை எடுத்தது.  அந்த மாநிலத்தின்  முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற உள்ளது.
அந்த வகையில், மெட்ரோ ரயில் என்ற காஷ்மீர் மக்களின் கனவு நனவாக உள்ளது. அத்துடன், அந்த மெட்ரோ ரயில் சேவையானது டெல்லி போன்ற நகரங்களுடன் சேர்க்கவும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
இப்பணிகளுக்காக, ஸ்ரீநகரில் மெட்ரோவில் நிர்வாகம் செயல்பட தொடங்கி இருக்கிறது. மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில், விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல், ஸ்ரீநகர் மெட்ரோ நிர்வாகம் கட்டுமான பணிகள் தொடங்கும். ஸ்ரீநகர் மெட்ரோ திட்டத்தின் தலைவராக ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர் மெட்ரோ இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, காரிடார் -1 மற்றும் காரிடார் -2 என பெயரிடப்பட்டுள்ளது.  முதலாவதாக, ஸ்ரீநகரில் 25 கி.மீ நீளமுள்ள மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் ஒவ்வொரு பகுதியிலும் தலா, 12 ரயில் நிலையங்கள் இருக்கும் வகையில் திட்டம் தயாராகி வருகிறது. இந்த திட்டத்திற்கு ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும்.