மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 9

தூய்மையான மாணிக்கங்கள் அழுத்திச் செய்யப்பட்ட மாளிகை மாடங்கள். வாசனைப் புகை மணக்கும் சயனப் படுக்கை. சுற்றிலும் எங்கும் விளக்குகள் எரிகின்றன. இச்சூழலில் தூங்குவதற்காக அமைந்த படுக்கையின் மீது சயனித்திருக்கும் பெண்ணுக்கு உறக்கம் எப்படி வரும்? உங்கள் வீட்டு மாணிக்கக் கதவின் தாழ் திறப்பாய் மாமன் மகளே!என்கிறாள் பொறுப்புள்ள நிலையில் வெளியே காத்திருக்கும் பெண். மற்றும் மாமி! நீங்களாவது அவளை எழுப்புகிறீர்களா ?
நாங்கள் இவ்வளவு நேரம் அழைத்தும் அவள் பதில் ஏதும் சொல்லவில்லையே ஏனம்மா??உங்கள் மகள் வாய் பேசாதவளா??காது கேளாதவளா??இல்லை சோம்பேறியா ?அல்லது ஏதோ மந்திரத்தால் மயக்கம் அடைந்து இன்பமாகப் பேருறக்கம் கொண்டாளா ?

கண்ணனை ‘மாமாயன்’ என்றும், தாயும் தந்தையும் ஆன ‘மாதவன்’ என்றும், வைகுந்த வீட்டுக்குத் தலைவனான ‘வைகுந்தன்’ என்றும் அவன் நாமங்கள் பலவற்றை நாவால் சொல்லி மனதில் நிறுத்திக் கொள்கிறோமே..உன் மகள் துயிலெழ மாட்டாளோ?? என வினவுகின்றனர்.

ஆர்.கே