மலபார் கூட்டு போர்ப்பயிற்சி

பாரதம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட் நாடுகள்’ (நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை நாடுகள்) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்நாடுகளின் கடற்படைகள் ஆண்டுதோறும் மலபார் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டு்க்கான கூட்டு போர்ப்பயிற்சி ‘தி மலபார்-21’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவின் ஆளுகையின் கீழ் உள்ள மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குவாம் தீவில் வரும் 26 முதல் 29ம் தேதிவரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.