மனநலம் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் உலக மனநல தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மன அழுத்தம் உள்ளிட்ட மனநோய்கள் ஒருவரை தற்கொலை செய்யும் நிலைக்கு கூட தள்ளக்கூடும் என்பதால் அனைவரும் மனநலம் பேணுவது அவசியம்.
ஒருவர் மனம் நலமாக இருக்கிறது என்றால் அதற்கு என்ன பொருள்? உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ‘தனது ஆற்றலை அறிந்து, தினசரி வாழ்வில் ஏற்படும் மன இறுக்கத்தை சமாளித்து, ஆக்கப்பூர்வமாக உழைத்து, சமுதாயத்திற்கு உறுப்படியாக பங்காற்றுபவரே மனநலனுடன் இருப்பவர்’.
வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நமது சிந்தனை, உணர்வுகள், நடத்தை ஆகியவற்றை தீர்மானிப்பது மனநலம் தான். உடல்நலம் எந்தளவு முக்கியமோ அதே அளவு மனநலமும் முக்கியம்.
உடல்நலனும் மனநலனும் நெருங்கிய தொடர்புடையவை. மனநலம் குன்றினால், உடல்நலமும் குன்றும். இதனால், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படலாம். அதே போல, உடல்நலம் குன்றினால் மனநோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
சரிவிகித உணவு. ஆரோக்கியமான உணவு பழக்கம். தினமும் உடற்பயிற்சி. இரவில் போதியளவு உறக்கம். வாழ்க்கை சில வேளைகளில் கடினமானாலும் நேர்மறையான மனப்பாங்கு. குறிப்பிட்ட இடைவெளியில் உடற்பரிசோதனை. ஆண்டிற்கு ஒருமுறை மனநல ஆலோசகரிடம் பரிசோதனை. நல்ல பழக்கவழக்கங்கள். தினசரி கோயிலுக்கு செல்லுதல். யோகா, தியானம் பழகுதல். குடும்பத்தில் மனம்விட்டு பேசுதல். சொந்த பந்தங்கள், நட்பு வட்டாரத்தில் சந்தோஷமாக பழகுதல் போன்ற சில நல்ல பழக்கவழக்கங்கள் நம் மனநலனை காக்க என்றும் உதவும்.
‘நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமான மனநலமும் பேண நமது பாரதிய வாழ்க்கை முறையே சிறந்தது’ என்பது அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மை.
இன்று உலக மனநல தினம்