பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முதன்முறையாக 2014-ம் ஆண்டு பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தூாய்மை இந்தியா, யோகா தினம், டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா என பல திட்டங்கள் அடுத்தடுத்த அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் உடல் வலிமையை பேணும் வகையில் ‘ஃபிட் இந்தியா’ என்ற திட்டத்தை, பிரதமர் மோடி,நேற்று தொடங்கி வைத்தார்.
ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் நலத்தை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு இந்தியரும் ஃபிட் இந்தியா இயக்கத்தில் இணைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நோயற்ற இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்து வரும் அரசு அதற்கு உதவி புரியும் வகையில் ‘ஃபிட் இந்தியா’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.