பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற சுகாதார மையத்தின் ஊழியர்கள், ஒரு பெண்ணின் பிரசவத்தின்போது, அப்போதே பிறந்த அந்த சின்னன்சிறு குழந்தையின் தலையை கொடூரமாக துண்டித்து எடுத்ததுடன் அதன் உடலை அந்த தாயின் வயிற்றிலேயே விட்டுவிட்டனர். உயிருக்கு ஆபத்தான முறையில் அந்த பெண் மேல் சிகிச்சைக்காக ஜாம்ஷோரோவில் உள்ள லியாகத் மருத்துவம் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு காரணம் மத துவேஷம்தான். அந்த பெண் ஒரு ஹிந்து என்பதால், அவருக்கு சிகிச்சை அளித்த அந்த முஸ்லிம் மத அடிப்படைவாதியான மருத்துவர் இப்படி செய்துள்ளார் என அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட இஸ்கான் கொல்கத்தா துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ராதாரமன் தாஸ், ” ஒரு முஸ்லிம் குடும்பம் சட்டவிரோதமாக எல்லையை கடக்கும்போது அவர்களின் குழந்தை இறந்ததால் சர்வதேச நாடுகளும் கொந்தளிக்கிறது. ஆனால ஒரு முஸ்லிம் மருத்துவர், ஒரு ஹிந்து குழந்தையின் தலையை வெட்டும்போது முழு அமைதி காக்கிறது” என்று வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம், சட்டவிரோத மதமாற்றம், குழந்தை திருமணம் மற்றும் கொலைகள் உள்ளிட்ட ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து சர்வதேச சமூகம் வாய் திறக்க மறுப்பது அதன் சார்பு நிலையை காட்டுவதாக உள்ளது.