கேரளாவில் முஸ்லிம்களின் வக்ஃபு வாரிய நியமனங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்த வேண்டும் என்ற அரசாணைக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனையடுத்து, சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வாக்கு வங்கி அரசியல் செய்யும் கேரள கம்யூனிச ஆளும் கட்சி, முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு பணிந்தது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், ‘அரசு இதுகுறித்து கூட்டங்கள் நடத்தி முடிவெடுக்கும். அதுவரை தற்போதைய நிலையே தொடரும்’ என அறிவித்தார். சபரிமலை கோயிலில் இளம்பெண்கள் நுழைவதை ஹிந்து பக்தர்கள் எதிர்த்தபோது, இதே பினராயி என்னென்ன செய்தார் என்பது மக்களுக்குத் தெரியும். வருமானம் வரக்கூடிய அனைத்து ஹிந்துக் கோயில்களும் கேரள அரசின் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் அனைத்து நியமனங்களும் இதே பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன. ஹிந்துக்கள் இதனை எதிர்த்தாலும் கம்யூனிச அரசு அதற்கு செவி சாய்ப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால், நாத்திகர்கள், ஹிந்து விரோதிகள், கம்யூனிஸ்ட் அமைச்சர்கள்தான் ஹிந்துக் கோயில்களை கட்டுப்படுத்துகிறார்கள்.