ப.சியும் ‘ஆணவக்’ கொலையும் – பகுதி2

சாதி வேற்றுமையைக்காட்டி காதல் திருமணங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நேரங்களில் அந்த மணமகன் (ள்) அல்லது இருவருமே கொல்லப்படும் அவலத்திற்கு இட்டுச் செல்கிறது. பிறமாநிலங்களில் அவற்றைக் கவுரவக்கொலை என்று அழைக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் அதனை ஆணவக்கொலை என்றே பேசுகிறோம் – எழுதுகிறோம்.

ஆணவம் சாதியில், சொத்தில், தனக்குள்ள அந்தஸ்தில் என்று ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு வழிகளில் காணப்படுகிறது.

நாம் சென்ற பதிவில் ( பகுதி 1) கண்டது போல் பசியிடம்தான் தான் அறிவாளி, நிரந்தர நிதி அமைச்சர் என்கின்ற மமதை சொல்லிலும் செயலிலும் வெளிப்படுவது வாடிக்கையாக ஆகிவிட்டது. அவருக்கும் பதவி இல்லை அவர் கட்சியும் ஆட்சியில் இல்லை என்பதை அவர் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

கொலை என்றால் நாம் பெரும்பாலும் ஒருவரின் உயிரை மாய்ப்பது என்று தான் பொருள் கொள்வோம். அது என்னவோ உண்மைதான். ஆனால், ஒரு மனிதனின் நம்பிக்கைகளை கருத்தியல்லட்சியங்களைச் சிதைப்பது என்பது உயிரை எடுப்பதைவிட கொடியது என்று மனவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதுவும் பெருமளவில் ஒரு நாட்டு மக்களின் எதிர்கால கனவுகளை, அவற்றை அடையகைக் கொள்ளப்படும் உயர் முயற்சிகளை, ஊக்கத்தை கொல்வதை இன்னும் பெரிய பாதகம் என்று தானே சொல்ல வேண்டும்.

இந்த குற்றச்சாட்டைத்தான் நாம் ப.சி மீது சுமத்துகிறோம். எப்படி என்கிறீர்களா? ‘மத்திய பொதுபட்ஜெட் பற்றிய விவாதத்தில் மாநிலங்கள் அவையில் அவர் என்ன பேசினார் ?  ” நீங்கள் (மத்தியஅரசு) 2024க்குள் நாட்டின் உற்பத்தி மதிப்பை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவோம் என்று பேசுகிறீர்களே? இதென்ன பிரமாதம்,  நாம் 7 அல்லது 8 சதவிகித வளர்ச்சியைக் கண்டால் தனக்குத் தானே உற்பத்தி மதிப்பு (ரூபாய்கணக்கில்) இரட்டிப்பாகிவிடும், இதனை ஒரு சாதாரண லேவாதேவி வணிகர் கூட சொல்லிக் கொடுப்பாரே” என்று arasai மிகதுச் சமாகப்பேசினார்.

“5 வருடத்திற்குள் உற்பத்தியை ரெட்டிப்பாக்குவோம் என்கின்ற இலக்கை நோக்கி பெரும் ஊக்கத்துடன் அனைவரும் இணைந்து முன்னேறுவோம்” என்று பிரதமர் எவ்வாறு நாட்டு மக்களுக்கு, இளைய சமுதாயத்திற்கு உயர் எண்ணங்களை விதைக்கிறார், ஆனால் பசி அந்த லட்சியங்களை துவக்கத்திலேயே கொச்சைப்படுத்திக்கிறார் என்று பாருங்கள்.  அதனால்தான் அவர் பேச்சை ‘ ஆணவக்கொலை’ என்கிறோம் நாம்.

அதைவிட இன்னொரு கொடுமை என்னதெரியுமா? மோதி அரசு 5 ட்ரில்லியன் டாலர் என்று மட்டும் தான் சொல்லுகிறதா ? அதனினும் மிகவும் நமக்கு பெருமிதம் அளிக்கும் 2வது வாக்கியத்தை ப சி மிகவும் சாதுர்யமாக மறைத்துவிட்டார்.

” நம்நாட்டு பொருளாதாரத்தை உலகின்  3வது பெரும் பொருளாதார வல்லராசாக்குவோம் ” என்ற இலக்கை மிகவும் அழுத்தம் திருத்தமாக பிரதமர் குறிப்பிட்டார். 2014ல் நாம் உலகின் பெரிய பொருளாதார பட்டியலில் 11வது இடத்தில இருந்தோம். 5 ஆண்டுகளில் முன்னேறி நாம் 6வது இடத்தைப் பெற்றுள்ளோம். இந்த சூழ்நிலையில்தான் நாம் பெரும் பாய்ச்சல் எடுத்து 3ஆம் ரேங்க் பெற வேண்டும் என்ற மோதிஜியின் உறுதியினை நாட்டின் பால் பற்றுள்ளுவர்கள் அனைவரும் நம்புகின்றனர். ஆதரவளிக்கின்றனர்.

இங்கே, நாம் இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். தரவரிசைப் பட்டியலில் நமக்கு முன்னால் உள்ளவர்கள்- ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி எல்லாம் நோஞ்சான்கள் இல்லை, அவ்வளவு சுலபமாக தங்கள் இடத்தை விட்டுக்கொடுத்துவிடமாட்டார்கள். அதுவும் தவிர, நமக்கு முன்னாள் காலைவாரி விட்டு நாம் அந்த இடத்தைப் பிடித்துவிடலாம் என்று நினைப்பதற்கு உலகப்பொருளாதாரம் ஒன்றும் உங்கள் காங்கிரஸ் கட்சி விவகாரம் அல்ல திருவாளர் பசி !

வணிக நிறுவனங்கள் தங்கள் ப்ராண்ட் போட்டியாளர்களின் பிராண்டுடன்  ஒப்பிடுகையில் தாம் எங்கிருக்கிறோம் என்று சந்தையை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார்கள். முதலில் இருக்கும் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும், பின்னர் மேலும் முன்னேற வேண்டும் என்பதை விளக்கும் போது ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுவார்கள்.

அதுதான், நடைபயிற்சி மேடை( Tread Mill  ) என்ற உபகரணம். இங்கே நாம் பயிற்சி செய்யும்போது, ஒருவர் நிற்கும் இடத்தைக் காத்துக்கொள்ளுவதற்கே தொடர்ந்து ஒரே சீரான வேகத்தில் நடக்க வேண்டும் அல்லது ஓட வேண்டும்.  இல்லையென்றால் நாம் மேடையில் இருந்து சிறிது சிறிதாக பின்னடைந்து மேடையை விட்டே கீழே தள்ளப்படுவோம்.

இப்படியாக, பொருளாதார வல்லராசாக வேண்டும் என்ற நம் இளைஞர்களின் விஸ்வரூப கனவுகளைத் தான் பசி தன்னுடைய குதர்க்க பேச்சால் தகர்க்கப் பார்க்கிறார்.

எனவே, பசியின் பேச்சு ஆணவக்கொலை என்று மீண்டும் ஒருமுறை நாம் உரக்கச்சொல்லுவோம்.