கேரளா பீளமேடு தாலுகாவில் உள்ள ஒரு ‘கிளிப் இன்’ எனும் ரிசார்ட்டில் கடந்த ஞாயிறு அன்று இரவு பார்ட்டி நடைபெற்றது. இதில் சினிமா, சின்னத்திரை நடிகர்கள், ஐ.டி துறை ஊழியர்கள் உட்பட 60 பேர் கலந்து கொண்டனர். அதில் 25 பேர் பெண்கள். இந்த விருந்தில், எல்.எஸ்.டி, மரிஜுவானா, ஹெராயின் உள்ளிட்ட போதை மருந்துகளும் பறிமாறப்பட்டன. செய்தி அறிந்த கேரள காவல்துறை, போதை ஒழிப்புத் துறையினர் கூட்டாக ரெய்டு நடத்தி பலரை கைது செய்துள்ளனர். இந்த ரிசார்ட் கேரள சி.பி.ஐ கட்சியை சேர்ந்த வேகமான் என்பவருக்கு சொந்தமானது. அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார்.