பொய்யுரைக்கும் மமதா

குஜராத்தில் முறைகேடாக செயல்பட்ட அன்னை தெரசா உருவாக்கிய ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ அமைப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகக்கூறி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள, மத்திய உள்துறை அமைச்சகம், ‘நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. குஜராத் மையத்தில், ஹிந்து சிறுமியரை பைபிள் படிக்கச்சொல்லி துன்புறுத்துவது, மத மாற்றப் புகார், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றாதது உள்ளிட்ட பல புகார்கள் எழுந்தன. எனினும், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை விதிகளை மிஷனரீஸ் ஆப் சாரிட்டி முறையாக பின்பற்றாததால், அதன் பதிவை புதுப்பிக்கும் கோரிக்கை மட்டுமே நிராகரிக்கப்பட்டது. அதை மறுபரிசீலனை செய்யும்படி அவர்கள் கோரவில்லை. வங்கி கணக்குகள் ஏதும் முடக்கப்படவில்லை. மேலும், தங்கள் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என அவர்களே பாரத ஸ்டேட் வங்கியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.