பெண்கள் உரிமை தடுத்தவர்களை அடையாளம் காண்போம்

நமது நாட்டில் பெண்கள் எப்போதும் போற்றி கொண்டாடப்படுகின்றனர். நாம் அனைவரும் வணங்கும் சிவபெருமான், தன்னுடைய சரிபாதியை தனது மனைவி பார்வதி தேவிக்கு வழங்கி, “ஆணும் -− பெண்ணும் சமம்” என உலகிற்கு உணர்த்திய பூமி பாரதம். பெண்கள் ஆண்களுக்கு நிகராகவே எப்போதும் பாவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சம அந்தஸ்து வழங்க, மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் நடந்தது வேறு…

வேத பூமியான பாரத தேசத்தில், பெண்களுக்கு சரிசம உரிமை கொடுக்கப்பட்ட நிலை மாறி, படையெடுப்பாளர்கள் படையெடுத்து வந்தபோது, பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நிலையில், பெண்களின் கல்வி படிப்படியாக குறைந்து, வீட்டில் முடக்கப்பட்டனர்.
பண்டைய பாரதத்தில் கார்கி, லோபமுத்ரா போன்ற பல ரிஷி மாதர்களும், பிரம்மவாதினிகளும், பாடல்களை எழுதி வேதத்தில் புலமைப் பெற்ற பெண்கள் என இருந்த நிலை மாறி, படையெடுப்பாளர்களுக்குப் பயந்து, தங்களது கற்பைக் காக்க வீட்டின் நான்கு சுவற்றுக்குள் இருக்கும் நிலைமை வந்தது. மேலும், பிரிட்டிஷ் ஆட்சி செய்த காலத்தில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மேற்கு நாடுகளில் உள்ள பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டு இருந்தனர். இந்த மேற்கத்திய நாடுகளில், பெண்களுக்கு சில உரிமைகள், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மட்டுமே கிடைத்தது.
மேற்கத்திய நாட்டில், பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத நிலைமையில், பாரதத்தில் வேதத்தின் அடிப்படையில், தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில், பெண்களுக்கு “ஸ்த்ரீ தானம்” என்ற சொத்தில் உரிமை இருந்தது. ரிக்வேதத்தில் பெண்கள் ஞானிகளாகவும், இல்லத்தரசிகளாகவும், நிர்வாகத்தின் அதிகார பொறுப்பில் இருப்பவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து போன்ற ஐரோப்பா நாடுகளில், பெண்கள் தங்களின் உரிமைகளுக்காக கோரிக்கை வைத்தால், அவர்களை சூனியக்காரி என்று உயிரோடு எரித்த நிலைமையும், 19ம் நூற்றாண்டு வரை காணப்பட்டது.
ஆண்களுக்கு சரிசம உரிமை பெற்ற பெண்கள் இருந்த பாரதத்தில், படையெடுப்பாளர்கள் மற்றும் காலனித்துவ அடக்குமுறையின் காரணமாக, பாரதத்தில் பெண்கள் இன்று தங்களின் 33% இடஒதுக்கீடு உரிமைகளை கேட்கும் அவல நிலையில் நிற்கிறார்கள்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற விஷயத்தில் கவர்மெண்ட் ஆஃப் இந்தியா ஆக்ட் 1935ல் (Government of India Act, 1935) ஒரு சட்ட தீர்மானம் எடுக்கப்பட்டது. அன்சா மெஹ்தா (Hansa Mehta) என்ற பெண் ஐ.நா. சபையின் பெண்களின் கமிட்டியின் உறுப்பினராக இருந்த போது, 1935ல் மத்திய அரசாங்க சட்டத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற எண்ணத்துக்கு, தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
1949ம் ஆண்டின் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள், 389 பேரில் 15 பெண்கள் மட்டுமே இருந்ததால், அப்போதைய இடைக்கால பார்லிமெண்டில் (Provisional Parliament) பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதைப் பற்றிய விவாதம் நீண்ட காலம் நடைபெற்றது. சுதந்திர பாரதத்தில் பெண்களை அதிகாரப்பூர்வமாக கௌரவிப்பது மற்றும் அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் கணிசமான பங்கு தருவதை குறித்த இந்த விவாதத்தில் பல எதிர்ப்புகள் வந்தன. பெண்களின் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை உறுதி செய்வதற்கான அரசியல் உரையாடலின் துவக்கமாக இதனைக் குறிப்பிடலாம்.
இரு பெண்கள் – ஹான்சா மேதா மற்றும் ரேணுகா ராய், 1949 அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்ட பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து, பல போராட்டங்களை தலைமைத் தாங்கியவர்களில் இந்த இரண்டு பேர்களும் முன்னிலை வகித்தார்கள். 1949 அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்ட பெண்கள் இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆதரித்த ஒரே ஒருவர் ஆர்.கே.சௌதாரி ஆவார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா 2023 செப்டெம்பரில் பாராளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டு, இதை சட்டமாக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு முன்பும் பாராளுமன்றத்தில் இந்த மசோதா 1989, 1999, 2003, 2009ம் ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்டு, காங்கிரஸ் போன்ற கட்சிகளால் ஏற்றுக் கொள்ளப்படாமல் தோல்வியடைந்தது.
காங்கிரஸ், – தி.மு.க போன்ற கட்சிகளின் போலியான பெண் ஆதரவு முகமூடியின் நடுவில், பா.ஜ.க மீண்டும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை அமலுக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டது. 2023ல் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை “நாரிசக்தி வந்தன் அதிநயம்” (Nari Shakti Vandhan Adhinayam) என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு, 2023 செப்டம்பர் மாதத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற இரு அவைகளும் ஏற்றுக்கொண்டு, 2023 செப்டம்பர் 29 அன்று, ஜனாதிபதி அவர்களின் ஒப்புதல் கையெழுத்தும் பெற்றது.
இந்த மசோதாவை சட்டமாக்கி அமலுக்கு கொண்டு வருவதற்கு, அரசியல் அமைப்பில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும். இந்த திருத்தத்தை கொண்டு வருவதற்கு, மக்களவையில் மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போது தான் பெண்களின் இட ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு கொண்டு வர முடியும். இதற்கான வாக்களிப்பு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று நடைபெற்றது. மக்களவை உறுப்பினர்களில், 298 உறுப்பினர்கள் பெண்களின் இட ஒதுக்கீட்டுக்கான அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தனர், ஆனால் 230 உறுப்பினர்கள் அதை எதிர்த்து வாக்களித்தனர், திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பகுதி குறியீட்டை தொடாததால், பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வர இயலாமல் மீண்டும் தோல்வி அடைந்து உள்ளது.
‘நாங்கள் தான் பெண் உரிமைக்காக பாடுபடுகிறோம்’ என்று கூறிக் கொண்டு இருக்கும் காங்கிரஸ் கூட்டணியான தி.மு.க உட்பட பல கட்சிகளும், அமைப்புகளும் இந்த பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு என்ற விஷயத்தில் ஆதரவு தெரிவிக்காதது எதை சித்தரிக்கிறது?
காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி தி.மு.க மற்றும் பிற கட்சிகளும், தாங்கள் இல்லாவிட்டால் பெண்கள் மேம்பட்டிருக்க மாட்டார்கள் என்று கூறும் அமைப்புகள் பெண்களின் இட ஒதுக்கீட்டை ஆதரிக்காதது ஏன்?
பெண் ஆதரவாளர் போல நடிக்கும் கட்சிகள், பெண்கள் இட ஒதுக்கீட்டு அரசியலமைப்பு திருத்த மசோதாவிற்கு, வாக்களிக்காதலால் தோல்வியடைந்தன. முன்பு தகுதி உள்ள பெண்கள் இருக்கிறார்களா? என்று கேலியாக கேள்வி கேட்ட இவர்கள், இப்பொழுது எப்படி நீங்கள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரப்போகிறீர்கள் என்று பா.ஜ.கவை பார்த்து பிரியங்கா காந்தி போன்றவர்கள் சவாலிடுகிறார்கள்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வர வேண்டும் என்றால் அது நம் விரலில் உள்ளது. பெண்களை மேம்படுத்தும் கட்சிக்கு வாக்களித்து பெண்களையும் நாட்டையும் உயர செய்வோம்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குகிறது. இதன் முக்கிய விளைவுகள்:
அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு
இது பெண்களின் அதிகாரமளித்தலுக்கு நேர்மறையான விளைவுகளைத் தரும். இப்போது நாடாளுமன்றத்தில் பெண்கள் சுமார் 15% மட்டுமே. பாரத நாட்டை, பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ள 64 நாடுகளில் ஒன்றாக மாற்றும்.
கொள்கை முடிவுகளில் மாற்றம்
பெண் தலைவர்கள் வந்தால் பெண்கள், குடும்பங்கள், சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கொள்கைகள், திட்டங்கள், நிதியுதவி வரும்.
பாலின சமத்துவத்திற்கு உலக முன்மாதிரி
“பாலின சமத்துவத்திற்கான பாதை அவசியமானது மட்டுமல்ல, அடையக்கூடியது” என்ற தெளிவான செய்தியை உலகிற்கு உணர்த்தி இருக்கும்.
சமூக உள்ளடக்கம் & அதிகாரமளித்தல்
“யாரையும் விட்டுவிடாத” பட்டியல் சமூகப் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளது. ஆண் குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டையும் மீறி, பெண் பிரதிநிதிகள் தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவர்.
ஜனநாயகம் வலுப்பெறும்
முடிவெடுக்கும் இடத்தில் பெண்களின் குரல் கேட்கும், பெண்களுக்கான திட்டங்கள் அதிகரிக்கும், பாரதம் உலகுக்கே முன்னுதாரணமாகி இருக்கும்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்