உத்தரப் பிரதேசம் லோக் பவனில் நடந்த ஒரு விழாவில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து மீரட்டின் ஹஸ்தினாபூருக்கு 1970ம் ஆண்டு அகதிகளாக வந்த 63 பெங்காலி ஹிந்துக் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் விவசாயத்திற்காக தலா இரண்டு ஏக்கர் நிலத்தை நீண்டகால குத்தகைக்கு வழங்கினார். மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 சதுர மீட்டர் பரப்பளவில் வீடுகட்டும் நிலம், வீடுகள் கட்டுவதற்கு முதலமைச்சரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூ. 1.2 லட்சத்தையும் வழங்கினார். அவர்களுக்கு இதற்காக, கான்பூர் தேஹத் ரசூலாபாத்தில் 300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 63 நிலப் பட்டாக்களை பெற்றதன் மூலம் 400 பேர் நேரடியாக பயனடைந்தனர்.