பூனைக்கு மணி கட்டும் பாரதம்

யார் சொன்னாலும் கேட்காத ஒரு கர்வம் பிடித்த நாடு உண்டு என்றால் அது சீனாதான். காலையில் எழுந்ததும் யார் நிலத்தை இன்று ஆக்கிரமிப்போம் என்று யோசிப்பது போல உள்ளது அவர்களின் செயல்கள்.

நேபாளத்தில் ஹும்லா கிராமத்தை ஆக்கிரமித்த சீனா அங்கு பெரிய கட்டடங்களை கட்டியுள்ளது. இது நேபாளத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்தின் முதல் பகுதி. இது குறித்து பலமுறை சொல்லியும், நேபாள பிரதமர் ஒலியின் காதுகளுக்கு எட்டவில்லை. சீனாவின் கைப்பாவையான அவர் நைனிடால், டெஹ்ராடூன், லிபுலேக், காலாபாணி உள்ளிட்ட பாரதத்தின் பகுதிகள் தங்களது பகுதிகள் என சிறுபிள்ளைத் தனமாக கூறிவருகிறார்.

லடாக்கில் பாரதம் தான் முன்பு சீனாவிடம் இழந்த பகுதிகள் சிலவற்றை மீட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் மஹர், குருங், மொக்பாரி பகுதிகள் மீட்கப்பட்டன. தென் சீனக்கடலில் போர் கப்பல் நிறுத்தம், மலாகா நீரிணை ரோந்து, கூட்டு ராணுவ பயிற்சி, உலக நாடுகளின் நட்பு என சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது பாரதம்.

இதனால் மூக்கறுபட்ட ஆத்திரத்தில், அருணாச்சல் எல்லையில் ராணுவத்தை குவிக்கிறது சீனா. கொரோனாவால் உலக அரங்கில் இழந்த கவுரவத்தை மீட்க, எல்லை ஆக்கிரமிப்புகளை நடத்துகிறது சீனா. ஆனால் பாரதத்தின் பராக்கிரமத்தால் அதன் செல்வாக்கு மேலும் சரிகிறது.

சீனா எனும் பூனையின் கழுத்தில் மணியை கட்ட பாரதத்தால் மட்டுமே முடியும். இதை உலக நாடுகளும் ஏற்கின்றன. நம் பின்னால் அணி வகுக்கின்றன.