கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த அடில் அகமது தர் என்பது பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது.
கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்.,28ல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஷாகீர் பசீர் என்பவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பீர் தாரிக் மற்றும் அவரது மகள் இன்ஷா ஆகியோரும் அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே ஸ்ரீநகரை சேர்ந்த வெய்ஸ் உல் இஸ்லாம் (19) மற்றும் புல்வாமாவை சேர்ந்த முகமது அப்பாஸ் (32) ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ., கைது செய்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தியது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரி கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் இவர்கள், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் வழிகாட்டுதல் படி, வெடிபொருள், பேட்டரி மற்றும் பிற உபகரணங்கள் தயாரிப்பதற்கு தேவையான ரசாயனங்களை அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர், என கூறினார்.