பாகிஸ்தானிடம் பலுதிஸ்தானை இந்தியா தான் காப்பாற்ற வேண்டும் – ஷெங்கே எச் ஷெரிங்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 43வது கூட்டம், சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் ஷெங்கே எச் ஷெரிங் பேசியதாவது: கில்ஜித் – பலுதிஸ்தான் மக்கள் இந்திய குடிமகன்கள். லடாக் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. இயற்கை வளங்களை காக்க போராட்டம் நடத்தும் உள்ளூர் மக்களை கடத்தியும், இனப்படுகொலை செய்தும், பொருளாதார தடை விதித்தும் அச்சுறுத்துகின்றனர்.

பாகிஸ்தானில் வசிக்கும் தலிபான் ஆதரவாளர்கள், தங்கள் பகுதிக்கு வரும், ஷியா பிரிவினரையும், கில்ஜித் பலுதிஸ்தான் பகுதியை சேர்ந்தவர்களையும் படுகொலை செய்யும்படி கூறியுள்ளனர். கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர்,உள்ளூர் மக்களை காக்க காஷ்மீரில் ராணுவத்தை நிறுத்தும்படி இந்தியாவை ஐக்கிய நாடுகள் கேட்டு கொண்டது. இன்று, கில்ஜித்- பலுதிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரை பூர்விகமாக கொண்டவன் என்ற அடிப்படையில், பாகிஸ்தானின் கொடூரமான காலனித்துவ ஆட்சியில் இருந்து காக்க, இந்தியா தனது அரசியலமைப்பு கடமையை துவங்கவும், கில்ஜித் -பலுதிஸ்தான் கட்டுப்பாட்டை மீட்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். பலுதிஸ்தானை சேர்ந்த அரசியல் ஆர்வலர் ஷெங்கே எச் ஷெரிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் கொடூர காலனித்துவ ஆட்சியில் இருந்து கில்ஜித் -பலுதிஸ்தானை இந்தியா மீட்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், கில்ஜித்- பலுதிஸ்தானை சேர்ந்த அரசியல் ஆர்வலர் ஷெங்கே எச் ஷெரிங் கூறியுள்ளார்.