புத்தகத்தின் சிறப்பு

பார்வையில் கல்வி எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சமூகத்தின் பல்வகைப் பிரச்சனைகளும் ஓய்ந்துவிடும் ராஜாராம் மோகன்ராய்(. இந்தியாவின் விடிவெள்ளி) இன்று உலகப் புத்தக நாள்.புத்தகங்கள் மற்றும் படிப்புசார் உபகரணங்கள் இவற்றைக் கொண்டாடும் விதமாக யூனெஸ்கோ மற்றும் இதர அமைப்புக்களால் சுமார் நூறு நாடுகளில் இன்று இந்த நாள் வருட வருடம் அனுசரிக்கப்படுகிறது. உலகப் புத்தக மற்றும் காப்பிரைட் தினமாகவும் இதனை அழைக்கிறார்கள். கொண்டாடுவதன் முக்கிய நோக்கமே புத்தகங்கள் வாசிப்பதில் புதைந்திருக்கும்m மகிழ்ச்சி மற்றும் வாசிக்கும் கலை இவற்றை மேம்படுத்துவதுதான். வில்லியம் ஷேஸ்பியர், மிகேல் செர்வாண்டிஸ் போன்ற அகில உலகப் புகழ் பெற்றஆசிரியர்களையும், புத்தகங்களையும் மரியாதை செய்யும் நோக்கில் 1995 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த யூனெஸ்கோ பொதுக்கூட்டத்தில் இந்த நாளை மேற்கண்டவாறு கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

புத்தகங்கள் படிப்போர், மற்றும் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை ப்ரஹ்மாண்டமாக உயர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் சமூகப்பிரச்சனைகள் ஓய்ந்து அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் என்பதே காண வேண்டும் என்பதே அனைவரின் அவா.பதிலாக பல பிரச்சனைகள் அதிகமாகி வருவது கண்கூடு. கல்வி எனும் பெயரால் எண்ணெழுத்தறிவை வழங்கி வருவதுடன் மனித வாழ்வை அமைதியடைய, மற்றும் நல்வாழ்வு வாழ வைக்க , மனித நேயத்தைபுகட்டுவிக்க இன்றிலிருந்தேனும் நம்மை நாம் தயார் செய்து கொள்ள
வேண்டும். இளைஞர்கள் தங்களைச் சமுதாயத்தில் தக அமைத்துக் கொள்ள இயலாமல் சற்றே முரண்படும் நிலையினை நாம் காண்கிறோம். குடும்பம், கல்வி நிலையங்கள், பணி செய்யுமிடம் போன்ற களங்களில் தம் பொருந்தாத , சிந்தனைகள், பேச்சுகள் இவற்றை விடுத்து நேர்மறையாகச் செயல்பட நல்ல புத்தகங்கள் வழிவகை செய்கின்றன. சமூக, பொருளாதார, அரசியல் போன்ற துறை சார்ந்த புத்தகங்கள் நம் கண்ணுக்கு முன்னே கொட்டிக்கிடக்கின்றன.கெளடில்யரின் அர்த்தசாஸ்திரமும், திருவள்ளுவரின் திருக்குறள் பொருட்பாலும் பொருளியலை அரசின் அங்கமாகக் கொண்டன. சமூக நாவல்கள் என்று ப்ரத்யேகமாய்ப் படிக்கும் மக்கள் இன்றல்ல நேற்றல்ல பல நூற்று ஆண்டுகளாகவே இருந்து வருகின்றனர். சமூகத் திறன்கள் சிறார்களின் மூளை வளர்ச்சிக்கும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதவை. நாம் எந்த அளவுக்கு டிஜிட்டல் பக்கம் முன்னணியில் நம்மை முன்னோக்கிச் செல்ல விழைகிறோமோ அதே பா ணியைத்தானே அடுத்து வரும் சந்ததனியரும் பின்பற்றுவார்கள் ?? சொல்லப்போனால் ஜெநெக்ஸ்ட் எனப்படும் அடுத்த தலைமுறையினர் டிஜிட்டல் பக்கம் நம்மைவிட பத்தடி முன்னே பாய்வதில் சூரத்தனம் காட்டத துவங்கிவிட்டனர். கொஞ்சம்
சிந்திப்போம். கோவிட 19 களேபரத்தில் வீட்டிற்குள் முடங்கிக்கிடப்பதனால் மட்டுமே புத்தகங்கள் வாசிப்பு மீண்டும் கொஞ்சம் துளிர் விடத தொடங்கியுள்ளது. சமூக விலகலை நாம் நமது தேக ஆரோக்கியம் காரணமாகவோ சட்டத்தின் காரணமாகவோ பின்பற்றத்தொடங்க கட்டாயமாக்கப்பட்டுள்ளோம். அதே நேரம் பல குடும்பங்களில் வருத்தப்படும் அளவிற்கு சற்றே கீறல்படர்ந்து தொங்கும் நிலையில் இருக்கும் சொந்த பந்த அம்சங்களை மீண்டும் க் கட்டி நிறுத்தும் உறவுப்பாலமாக கோவிட 19 நமக்கு வழிவகை செய்துவிட்டது. நாம் படித்த புத்தகங்கள் அவை சொல்ல வரும் சமுதாயக் கருத்துக்கள், இத்தகைய புத்தகங்கள் தீட்டிய ஆசிரியர்கள் மேற்கொண்ட சமுதாய பார்வை இவற்றை நமது குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டு வருகிறோமா இல்லையா. சிறுவயதில் நாம் இத்தகைய புத்தகங்களை வீட்டு சிறார்களை சற்றே பொறுமையாக அமர வைத்து படிக்க வைத்து, அவர்கள் கொண்டிருக்கும் சந்தேகங்கள் போன்றவற்றை நாம் கூட இருந்து தீர்த்து வைப்பதனால் இத்தகைய சமுதாயக் கருத்துக்கள் சிறார் மனதில் பசு மரத்தாணி போல் நன்கு பதிந்து அவர்களது பிற்கால வாழ்க்கையை பயனுள்ளதாக வைக்க ஏதுவாகும். வீட்டில் நாம் படித்து நினைவில் நிறுத்தவல்ல அளவிற்கு கற்பிக்கும் இத்தகைய புத்தகப் படிப்பு முறை நாளை பள்ளிகளில் படிக்கும் போதும் அப்படியே சிறார்கள் பின்பற்ற உறுதுணையாகும்