மேற்கு வங்கம், கரக்பூரில் உள்ள லெனின் பூங்காவில் லெனினின் சிலையை திருணமூல் காங்கிரஸ் கட்சி நிறுவியது. இது குறித்து பேசிய திருணமூல் தலைவர் சர்க்கார், “லெனினை ஒரு கட்சியுடன் தொடர்பு படுத்தக்கூடாது. எங்கள் கட்சி அரசியல் பாகுபாடு அற்றது. அதனால்தான் நாங்கள் இடதுசாரி தலைவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தோம்” என்று கூறினார். திருணமூல் செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. பா.ஜ.க வளர்ச்சியால் பயந்துள்ள திருணமூல் கட்சியின் புதிய கூட்டணி வியூகமா இது, கம்யூனிஸ்ட் கட்சியை ஒழிப்பேன் என கூறி, 2011ல் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிய மமதாவுடன் கம்யூனிஸ்ட் கூட்டணி வைக்குமா, அதற்காக காங்கிரஸ் கட்சியை கம்யூனிஸ்ட் கழற்றிவிடுமா, அப்படி கூட்டணி அமைந்தால் எலியும் பூனையுமாக உள்ள இரு கட்சித் தொண்டர்களும் இதனை ஏற்பார்களா, மக்கள் ஓட்டளிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.