புதிய கல்விக் கொள்கை நம் கல்வித் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அறிவுப்பூர்வ திட்ட ஆவணம்’. இது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப அறிவு நிறைந்த பரிந்துரைகள் கொண்ட ஆவணம். நம் கல்வி முறையின் எதிர்காலம் குறித்து இதுவரை எழுதப்படாத அளவுக்கு நுட்பமான அறிவுபூர்வமான ஆவணங்களில் ஒன்றாக புதிய கல்விக் கொள்கை உள்ளது. இந்தியாவில் 21ம் நூற்றாண்டுக்கான கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் விரிவான வழிகாட்டுதல்களை கொண்டிருக்கிறது. மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பழைய முறைக்கு விடை . சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் கல்வி. காலை உணவும் வழங்க பரிந்துரை, விருப்பம், திறனுக்கு ஏற்ப பாடத்திட்டம் தேர்வு செய்யும் வழிமுறை. அனைத்து மாணவர்களின் வளர்ச்சியிலும் கவனம். கற்றல் திறன் மதிப்பீட்டு முறை என பல்வேறு வழிகள் கூறப்பட்டுள்ளன. எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாக இருப்பது கல்வி தான். பல மொழிகள் கலாசாரங்களை உடைய இந்தியாவை போன்ற பரந்து விரிந்த நாட்டில் கல்வி இலக்குகளை அடைவதற்கு ஒருங்கிணைந்த வலிமையான தேசிய கல்விக் கொள்கை கட்டாயம் தேவை.
இந்திய கல்வி முறையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. சரியான நேரத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்படுகிறது. இதற்கு எதிராக கருத்துக் கூறுவது நாகரிகம் அல்ல. — அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.
படித்தவர், அனுபவஸ்தர், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர் சொல்கிறார். கேட்டுக்கொள்வார்களா சம்பந்தப்பட்டவர்கள்?