பாரத பிரதமர் மோடியும் பிலிப்பைன்ஸ் அதிபரும் அடுத்த வருடம் நேரில் சந்தித்து பேச ஆலோசிக்கப்பட்டு வரும் சூழலில், அந்த சந்திப்பில் பிரம்மோஸ் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு குழு பிலிப்பைன்ஸுக்கு டிசம்பரில் சென்று இதற்கான பூர்வாங்க வேலைகளை கவனிக்கும். பிரம்மோஸ் ஏவுகணை தரை, விமானம், கப்பல்களில் இருந்து ஏவப்பட ஏற்ற வெவ்வேறு வகைகளில் பாரதம் தயாரித்துள்ளது.
தற்போது பிலிப்பைன்ஸ் தரைப்படைக்கு ஏற்ற ஏவுகணைகளை வழங்க ஆராயப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நினைத்தபடி நடந்தால் பாரத்த்தில் இருந்து பிரம்மோஸை பெறும் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் இருக்கும்.