பிரான்ஸ் வழிகாட்டுகிறது

போரால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தன பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள். அவர்களுக்கு உணவு, இடம், உதவித்தொகை கொடுத்து ராஜபோகத்தில் வைத்திருந்தன இந்நாடுகள். அமைதியாக இருந்த அந்த நாடுகளில் அகதிகள் குடியேற்றத்திற்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,  வன்முறை, பயங்கரவாதம் தலை தூக்கியது. அதனால் தற்போது செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கின்றன அந்த நாடுகள்.

ஐரோப்பிய கண்டத்தில் முஸ்லிம் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பிரான்ஸ். ஆசிரியர் சாமுவேல் பெட்டி கொலை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அந்த நாட்டு மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று திரண்டனர். தற்போது பிரான்ஸ் அரசு தற்போது பயங்கரவாதத்தை தடுக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் ‘முஸ்லிம் நம்பிக்கை கவுன்ஸில்’ தலைவர்களை அழைத்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் மெக்ரான். அதில், இஸ்லாம்  ஒரு மதம், அது அரசியல் அமைப்பல்ல. பிரான்ஸ் முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கைகளில் வெளிநாட்டு தலையீட்டை  ஏற்கக்கூடாது என்ற இரண்டு முக்கிய கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இதனை ஏற்க அவர்களுக்கு 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதரசா கல்வி ஊக்குவிக்கப்படாது. அரசு அதிகாரிகளை அச்சுறுத்துவது, காவல்துறையினரை படமெடுத்தல் போன்றவை சட்ட மீறல்கள். இதற்கு 53,000 டாலர் அபராதம் என பல ஷரத்துகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

முஸ்லிம் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் மற்ற ஐரோப்பிய நாடுகள், இந்த நடைமுறைகளை தங்கள் நாடுகளிலும் செயல்படுத்த தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.