அமெரிக்க அரசின் ‘லிஜியன் ஆப் மெரிட்’ என்ற உயரிய விருதை பிரதமர் மோடிக்கு, அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த விருதை, பிரதமர் மோடி சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்த் பெற்று கொண்டார். அமெரிக்கா இந்தியா இடையிலான உறவை உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு, ‘பிரதமரின் தலைமைப் பண்பு மற்றும் சர்வதேச தலைமை இடத்தை பாரதம் ஏற்க வேண்டும் என்ற கொள்கை, இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்தவும், சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அவரது கொள்கைகளை இந்த விருது அங்கீகரித்துள்ளது’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.