சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச் ஒன்று அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுப்பட்டு இருக்கும் வீடியோ வெளியானது. இந்த வீடியோவை பகிர்ந்தது தொடர்பாக, பா.ஜ.க பெண் நிர்வாகியும் செயற்குழு உறுப்பினருமான சௌதாமினி மீது தமிழக காவல்துறை, அரசுக்கு எதிராக கலகம்செய்யத் தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவரை நேற்று கைது செய்தனர். ஏற்கனவே மாநில பா.ஜ.க இளைஞர் அணி நிர்வாகி வினோஜ் பி.செல்வம் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது தி.மு.க அரசு. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் முடியாத தி.மு.க அரசின் கோழைத்தனமான அரசியல் இது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து சர்ச் கட்டப்பட்டிருந்தால் அதுகுறித்து விசாரித்து அதனை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க அரசுக்கு எதிராக உண்மையை சொன்ன ஒரே காரணத்துக்காக அவரை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என சமூக ஊடகங்களில் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.