பா.ஜ.கவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ

முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சஞ்ஜய் ராமசுவாமி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அண்ணாமலை, “கர்மவீரர் காலத்துக் காங்கிரஸ் குடும்பம் எல்லாம், கடமை வீரர் நரேந்திர மோடி அவர்களின் பின்னால் அணி சேருகின்றனர். விருதுநகரின் புகழ்பெற்ற நீதியரசர் குடும்பத்தின், முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சஞ்ஜய் ராமசுவாமி அவர்கள், தமிழக பா.ஜ.கவில் இணைந்துள்ளார். தேசியத்தின் மீது நம்பிக்கை வைத்து தமிழகத்தை முன்னேற்ற முன் வந்திருக்கும் சகோதரர் சஞ்சய் ராமசுவாமியை தமிழக பா.ஜக.வின் சார்பாக வரவேற்கிறோம்” என தெரிவித்துள்ளார்.