உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீதான கொலைவெறி தாக்குதலுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி ஊடகத்தினருடன் உரையாடிய அவர், “பாரதம் எப்போதும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரானது. சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் உடனடியாக குணமடைந்து உடல்நலம் பெறட்டும்” என்றார். முன்னதாக, நியூயார்க்கில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் இம்மாதம் 12ம் தேதி சல்மான் ருஷ்டியை ஹாடி மேத்தர் என்ற ஒரு முஸ்லிம் மத அடிப்படைவாதி கத்தியால் கொடூரமாக பலமுறை தாக்கினான். ருஷ்டியின் கழுத்து மற்றும் வயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார். தற்போது நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.