பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குரூரங்களின் பாசறை

மத மாற்றத்தை தடுத்த காரணத்தால், பிப்ரவரி 5 அன்று தேதி திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம் ஜிகாதிகளால்  படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலையில் தொடர்புடைய பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பினர் நான்கு பேர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  இந்த கைதை தொடர்ந்து,  இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு (NIA) மாற்றப்பட்டது. கும்பகோணம், திருவிடைமருதூர், காரைக்கால் திருச்சி ஆகிய இடங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் (NIA) சோதனை நடத்தியது.

வகுப்புவாத, பிரிவினைவாத, தீவிவரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த, தமிழகத்தின்  மனித நீதி பாசறை, கேரளத்தில்  நேஷனல் டெவலப்மெண்ட் பிரண்ட், கர்நாடகத்தின் கர்நாடகா போரம் ஆஃப் டிக்னிட்டி ஆகிய  மூன்று அமைப்புகளும்  இணைந்து 2006-ல் உருவானது பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா.   மேற்படி மூன்று அமைப்புகளும், 2001-ல் சிமி தடைசெய்யப்பட்ட பின்னர் உருவானவை,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களை இஸ்லாத்திற்கு மத மாற்ற முயற்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் ஆயுதங்களை கையாளுவது எவ்வாறு என்பது பற்றிய பயிற்சியும் நடைபெற்றதாக  கூறப்பட்டது. இது சம்பந்தமாக மனித நீதி பாசறையின் பொறுப்பாளர்கள் நான்கு பெண்கள் உள்ளிட்ட 15 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். இது ௨௦௦௪ செய்தி. 2006 ஜூலை மாதம் கோவையில் மீன்டும் குண்டு வெடிப்பு  நடத்த திட்டமிட்டதாக மனித நீதிப் பாசறையின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  தி.மு.க.வின் தலையீட்டின் காரணமாக விடுவிக்கப்பட்டதாக செய்தி. இவர்கள்  மத மாற்றத்திற்கு எதிராக இருப்பவர்களை கொலை செய்வதும், கலவரத்தை தூண்டி விடுவதுமாக ஆட்டம்போட்டு வந்தவர்கள்.

மைசூரில் இரண்டு சிறுவர்களை கடத்தி ஐந்து கோடி ரூபாய் பிணயத் தொகை கேட்டவர்கள், பணம் கொடுக்க மறுத்ததின் காரணமாக இரு சிறுவர்களை கொலை செய்தவர்கள் கர்நாடகா போரம் ஆஃப் டிக்னிட்டி அமைப்பினர்.  2003-ல் எட்டு இந்து மீனவர்களை கொலை செய்த காரணத்திற்காக கேரளத்தின் நேஷனல் டெவலப்மெண்ட் பிரண்ட் அமைப்பினர்  கைது செய்யப்பட்டார்கள்.    வன்முறை, படுகொலை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் இணைந்த அமைப்பு  பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா.  2006க்கு பின்னர் கேரளத்தில் கிருஸ்துவப்  பேராசிரியரின் கையை வெட்டியவர்கள்,  இடதுசாரி மாணவர் அமைப்பின் பிரிதிநிதியை கல்லூரி வளாகத்தில் கொலை செய்தவர்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் குறிப்பின்படி, 2011 மும்பையில் நடந்த வெடி குண்டு தாக்குதலிலும், 2012-ல் பூனே வெடிகுண்டு தாக்குதலிலும், 2013-ல் ஹைதராபாத் நகரில் நடந்த குண்டு வெடிப்பிலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளதுt   2013 ஏப்ரல் மாதம் 23ந் தேதி கண்ணணூர் காவல்துறையினர் நரத் பகுதியில் உள்ள  தனல் தொண்டு நிறுவனத்தில் (  Thanal Charitable Trust )  டில் சோதனை நடத்திய போது,  மனிதர்களை சுட்டுக் கொல்வது எப்படி என்பது பற்றி பயிற்சி நடந்ததும், சோதனையின் போது, வெடிகுண்டுகள்,  தயாரிப்பிற்குறிய மூலப் பொருட்கள்,  வெடிமருந்து, கத்திகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா  அமைப்பின் அரசியல் பிரிவு சோசலிஸ்ட் டெமாக்ரிடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI), மாணவர்கள் அமைப்பு காம்பஸ் பிரண்ட் என்பது. லவ் ஜிகாத் என்ற ஒரு புதிய பாதையை உருவாக்கியவர்கள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா.  120க்கும் மேற்பட்ட ஹிந்து பெண்களை மத மாற்றம் செய்து, ஜிகாத்திற்கு உட்பட வைத்தவர்கள்.   உலக பயங்கரவாத இயக்கமான அல்காயிதவுடனும், ஆப்கானிஸ்தான் தாலிபான்களுடனும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யுடனும் தொடர்பு கொண்டவர்கள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா.

உண்மைக்கு மாறாக உச்ச நீதி மன்றம் சொல்லாத ஒன்றை சொல்லியதாக கூறி, உச்ச நீதி மன்றத்தின் கன்டணத்திற்கு ஆளானதால், உச்ச நீதி மன்ற தீர்ப்பு குறித்து தவறான கருத்து கூறியதற்காக நிபநதனையற்ற மன்னிப்பு கோருகிறேன். எந்தவித ஒளிவுமறைவுமின்றி நேரடியாகவே இதை தெரிவிக்கிறேன் என ராகுல் கூறியுள்ளார்.  2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் என்ற பெயரில் பொய்யான கருத்துக்களை கூறுவது மட்டுமில்லாமல், பிரதமர் மோடியின் மீது வசை பாடுவதே இவர் தொழில். பல்வேறு முனைகளிலிருந்து எதிர்ப்பு வந்தாலும் அதற்கு பதில் கூறாமல், மோடியை மட்டும் வசை பாடுகிறார். ஆகவே மன்னிப்புக் கேட்கும் மன்னன் என்றால் ராகுல்  காந்தி.

மன்னிப்பு படலத்தின் அடுத்த கதாநாயகன் கேஜரிவால்,  தேர்தல் பிரச்சார கூட்டத்தில், ‘12-ம் வகுப்பில் 90 சதவீத மதிப்பெண் எடுத்தாலும் டெல்லி மாணவர்களுக்கு பிரபல கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை உள்ளது.  தில்லி வாழும்  தமிழக மாணவர்கள், தில்லி வாழ் மாணவர்களின் உரிமையை பறிக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டுமானால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும்’ என பிரிவினையை தூண்டும் விதமாக பேசினார்.  கடுமையான கண்டனங்கள் வெளியானவுடன் மன்னிப்பு படலத்தை அரங்கேற்றினார்.

 கேஜரிவாலுக்கு ஆதரவாக நடிகர்  பிரகாஷ் ராஜ்,  ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து, ‘டெல்லி  மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் பறிக்கிறார்கள். அதனால் டெல்லி மாணவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.  நான் தமிழன் இல்லை, கன்னடன்’ என பிரிவினையை ஊக்குவிக்கும் விதமாக பேசியுள்ளார். இன்னும் மன்னிப்பு படலத்தை பிரகாஜ் ராஜ் துவக்கவில்லை, தனது தொழிலுக்கு ஆபத்து ஏற்பட்டால், மன்னிப்பு படலத்தை தொடங்குவார்.