பழையன கழிதலும்

குஜராத், காந்தி நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக துவக்கி வைத்தார். பழைய வாகனங்கள் அழிப்பு தொடர்பான தேசிய கொள்கையையும் பிரதமர் அறிமுகம் செய்தார். அப்போது அவர், ‘பழைய வாகன அழிப்பு, மறுசுழற்சி கொள்கை, தேசத்தின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில்கொண்டே இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, பாரதத்தின் மோட்டார் வாகன துறையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கழிவுகளை செல்வமாக்கலாம். வாகன மாசு குறையும். மோட்டார் வாகன தயாரிப்பில் பாரதம் தன்னிறைவு பெற உதவும். வழிவகுக்கும். பழைய இரும்பு, உருக்கு இறக்குமதி குறையும். தன் பழைய வாகனத்தை மறுசுழற்சிக்கு தருபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் புதிய வாகனம் வாங்கும்போது மீண்டும் பதிவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. சாலை வரிகளிலும் அவர்களுக்கு சலுகை அளிக்கப்படும்’ என தெரிவித்தார்.