அரசு பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் தொழுகை நடத்துவதற்கு மதியம் 10 நிமிடங்கள் அனுமதிக்க வேண்டும் என ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு, தி.மு.க நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஆர்.பி சந்திரசேகர் கடிதம் ஒன்றை எழுதினார். இது மற்ற மாணவர்களிம் பெற்றோர், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை எழுப்பியது. பல ஹிந்து அமைப்புகள் தி.மு.க நிர்வாகியின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும், இந்து முன்னணி சார்பில் “ஹிந்து மாணவிகள் நலனுக்காக பள்ளி நேரத்தில் தினசரி 15 நிமிடம் கந்தசஷ்டி கவசம் மற்றும் ஹயக்ரீவர் மந்திரம் சொல்ல அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதநையடுத்து சந்திரசேகர் தான் அனுப்பிய கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் திரும்பப் பெற்றுக் கொண்டார்.