இன்று பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்த்புராவில் 1935ல் பிறந்தார் மில்கா சிங். இளம் வயதில் கால் கடுக்க தினமும் 20 கி.மீ நடந்து சென்று கல்வி பயின்றார். 15 வயதில், பாரத பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில், மில்கா சிங்கின் கண் முன்னாலேயே அவருடைய பெற்றோர், உடன் பிறந்த மூன்று பேரும் கலவரத்தில் கொல்லப்பட்டனர். அபோது செய்வதறியாமல் தவித்தார். ‘ஓடிவிடு, இல்லாவிட்டால் உன்னையும் சுட்டுக்கொன்று விடுவார்கள்’ என்று இறக்கும் தறுவாயில் தந்தை சொன்னதைக் கேட்டு ஓடத்தொடங்கினார் மில்கா சிங். அங்கிருந்து வந்து டெல்லியில் உள்ள தன் சகோதரியிடம் அடைக்கலமானார்.
வளர்ந்த பிறகு பாரத ராணுவத்தில் சேர்ந்து. மிக்குறைந்த நேரத்தில் 5 மைல்கள் ஓடும் முதல் பத்து வீரர்களுல் ஒருவராக வந்து 400 மீ ஓட்டப் பந்தயமொன்றில் ஜெயித்தபோதுதான் தன் திறமையை அறிந்தார் மில்கா சிங்.
1956 ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டார் மில்கா சிங். 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்கனார் அமெரிக்க வீரர் சார்லஸ் ஜென்கின்ஸ். அடுத்த இரண்டு வருடங்களில் அந்த அமெரிக்கரின் டைமிங்கைத் தாண்டிக் காண்பித்தார் மில்கா. 1960ல் ஒலிம்பிக்ஸில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார். காமன்வெல்த்தில் ஒரு தங்கம், ஆசியன் கேம்ஸில் 4 தங்கங்கள் என ஒலிம்பிக்ஸைத் தவிர இதர சர்வதேசப் போட்டிகளில் மில்கா சிங் எப்போதும் சாம்பியன்தான்.
1960ல் பாகிஸ்தானில் ஓட்டப்பந்தயத்துக்கு அழைப்பு வந்தபோது அங்குச் செல்ல மறுத்தார் மில்கா சிங். ஆனால், பிரதமர் நேருவின் வேண்டுகோளினால் பாகிஸ்தானுக்குச் சென்று. அதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு, ஏழாயிரம் பேர் கூடிய மைதானத்தில், அப்துல் காலிக்கைத் தோற்கடித்தார் மில்கா சிங். பரிசளிப்பு விழாவில், ‘நீங்கள் இன்று ஓடவில்லை, பறந்து சென்றீர்கள்’ என்று மில்காவைப் பாராட்டினார் ஜெனரல் அயூப் கான். அங்குதான் அவருக்கு ‘ஃபிளையிங் சிங் (பறக்கும் சீக்கியர்)’ என்கிற பட்டம் அளிக்கப்பட்டது.
மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு, ‘ரேஸ் ஆஃப் மை லைஃப்’ என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. பிறகு, ‘ரங் தே பசந்தி’ படத்தை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுக்கு இவ்வாய்ப்பை அளித்து, படத்துக்கான உரிமையாக ஒரு ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டார் மில்கா சிங். தனது 91 வயதான மில்கா சிங் கொரோனா பெருந்தொற்று நோயால் சண்டிகரில் மறைந்தார்.