பாராளுமன்றத்தில் நேற்று பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தனிநபர்களையும் பயங்கரவாதியாக அறிவிக்கும் சட்டதிருத்த மசோத தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்திருத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதிலில் இந்த அரசு பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளது என்றும் நகர்புறங்களில் பெருகி வரும் மாவோயிஸ்டுகளை அடக்குவதற்கு கடுமையான சட்டம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். பயங்கரவாத செயல்களை அடக்க சட்டத்தில் மாறுதல்கள் தேவை என்று தெரிவித்தார். பயங்கரவாத குழுக்களை கண்டுபிடித்து தடுக்கும் முயற்சிகளை எடுத்தால் அவர்கள் எளிதாக வேறோரு பெயரில் அமைப்பை ஏற்படுத்தி கொள்கிறார்கள். ஆதலால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஒவ்வொரு தனி நபரையும் இந்த சட்டத்தில் கொண்டு வரவேண்டும். எந்த வகையில் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தமாட்டது என்று உறுதியளித்தார். சமூக நலனுக்காக போராட்டம் நடத்துபவர்களை இந்த சட்டம் பாராளுமன்ற உறுப்பினர்.எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா சமுக நலனுக்கா போராடுபவர்கள் பயங்கரவாதிகள் இல்லை.ஆனால் சிறிய அளவில் கூட நக்சல்லைட்களை உருவாக விடமாட்டோம். முதலில் கொள்கைக்கா போராட வந்தவர்கள் பின்னர் ஆயுதங்களை ஏந்தி போராட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படிக்காத மக்களை தவறாக வழிநடத்தி ஆயுதத்தை கொடுத்து அரசுக்கு ஏதிராக போராட வைக்கிறார்கள். இதன் முக்கிய நோக்கமே தேசிய புலனாய்வு பிரிவுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு ஜெயில் ரிமாண்டு 14 நாளாக இருந்ததை 30 நாட்களாக கொண்டுவந்தது முக்கியாமனதாகும். அரசை எதிர்பவர்களை தேசதுரோகி என்று சொல்ல கூடாதுயென திரினாமூல் காங்கிரஸ் உறுப்பினார்வாதிட்டார். இதற்கு பதிலளித்த அமித்ஷா புலனாய்வு அமைப்பு அதிகாரம் அளிப்பதற்காக சட்டம் கொண்டு வந்ததே தவிர எதிர்கட்சியினரை மிரட்டுவதற்காக சட்டம் கொண்டு வந்ததே தவிர எதிர்கட்சிகளை மிரட்டுவதற்காக அல்ல மேலும் இது அரசியல் காரணத்திற்காக கொண்டு வரவில்லை. எந்த அரசிற்கு ஏதிராகவும் செயல்படாது என்று தெரிவித்தார்.