ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரிய பட்டிணம் தென்னந்தோப்பில் ரகசிய பயிற்சி முகாம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் வந்த அதிரடிப் படையினர் திடீர் சோதனை நடத்தினர். அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 35 இளைஞர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்களெல்லாம் அஸ்ஸாம், பிஹார், காஷ்மிர், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இதுமாதிரியான பயிற்சி முகாம் நடைபெறுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே பலமுறை நடைபெற்றுள்ளது.
பயிற்சி முகாம் நடைபெறும் பெரிய பட்டிணம் ஊராட்சி, ‘பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா’ அமைப்பின் ஆதரவாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் முதல் இஸ்லாமிய தலைநகர் என்ற கல்வெட்டு பதிக்கப்பட்டு பல்வேறு எதிர்ப்புக்குப் பிறகு அகற்றப்பட்டது.
இந்த ஊராட்சியின் மத்திய அரசின் நலத்திட்டமான ஜல்ஜீவன் திட்டப்பணிகள் ஒப்பந்தத்திலும் சுமார் 75 லட்சம் வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வருகிறது.
தமிழக அரசே! காலம் தாழ்த்தாது உடனடியாக நடவடிக்கை எடுத்து பயங்கர நடவடிக்கையை தடுத்து நிறுத்து.