பத்ருதீன் அஜ்மலின் அநாகரீக பேச்சு

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இடம் பேசிய அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யு.டி.எப்) கட்சித் தலைவர் பத்ருதீன் அஜ்மல், “முஸ்லிம் பெண்கள் 18 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால் ஹிந்து பெண்கள் அந்த வயதில் திருமணம் செய்வதில்லை. ஹிந்து ஆண்கள் பலவீனமான கருவுறுதலுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள், அதனால் குறைவான குழந்தைகளைப் பெறுகிறார்கள்.அவர்கள் 40 வயது வரை சட்ட விரோதமாக தொடர்புகளை வைத்துக்கொள்கிறார்கள்.குழந்தைகளை உருவாக்கி பணத்தை மிச்சப்படுத்த மாட்டார்கள்.ஆனால் 40 வயதுக்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள்.பிறகு எப்படி குழந்தைகளை பெற்றுக்கொள்வது?விளை நிலத்தில் எப்போது நீங்கள் விதை போடுவீர்கள்?நீங்கள் விளை நிலத்தில் விதத்தால் மட்டுமே அறுவடை செய்ய முடியும், அதன் பிறகு, வளர்ச்சியை நீங்கள் எல்லா இடங்களிலும் காணலாம்.அவர்கள் (ஹிந்துக்கள்) முஸ்லிம்களின் ஃபார்முலாவை ஏற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு 20 முதல் 22 வயதில் திருமணம் செய்ய வேண்டும்.பெண்களை 18 முதல் 20 வயதில் திருமணம் செய்து கொள்ளுங்கள், பிறகு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதை நீங்களே பார்க்கலாம்” என்று கூறினார். அவர் தெரிவித்த இந்த  ஹிந்துக்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் அநாகரீகமான கருத்துகளையடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.