மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியில் பதவி வகித்த போது, சட்ட விரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லிம்கள், வங்க முஸ்லிம்களுக்காக தனி சுதந்திரமான இடம் தேவை என ‘ஸ்வாதீன் பங்க பூமி’ ஒரு புதிய கோஷத்தை துவங்கினார்கள். இந்த கோஷம் எவ்வளவு ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டிய பின்னரும், ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட்கள் கண்டுகொள்ளவில்லை. முந்தைய கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்ன வழிமுறைகள பின்பற்றியதோ அதே வழி முறைகளை மம்தாவும் பின்பற்றுகிறார்.
மேற்கு வங்கத்தின் செய்தித் துறை அமைச்சாராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சாரியா, 1992ல் மேற்கு வங்க உள்துறை செயலாளர், அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், தேர்தல் பொறுப்பாளர்களும் மத்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய குறிப்பின் படி, வாக்காளர் பட்டியலில் உள்ள வெளிநாட்டவரின் பெயரை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றிக்கை அனுப்பினார். ஆனால், மாநிலத்தில் ஆண்ட இடது முன்னணி அமைச்சர்கள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிராகரித்து, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை நீக்க வேண்டாம் என உத்தரவிட்டார்கள். இதுவும் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக நடந்த தேச விரோத செயல். இதே செயலை தான் தற்போது மம்தாவும் செய்கிறார்.
1979 – 1983-ல் அஸ்ஸாமில் தனிச் சட்டம் கொண்டு வந்து இந்திரா காந்தி, ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை அளித்தவர், அதே கால கட்டத்தில் மேற்கு வங்கத்திற்குள் இந்தியாவிற்கு பாதுகாப்பு கருதி வந்த மடுவா என்ற தலித்துக்களுக்கு குடியுரிமை அளிக்கவில்லை. மம்தா பனார்ஜி ஏன் கேள்வி கேட்கவில்லை? ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லிம் கள் அரசியல் விளை யாட்டின் மூலம் அதிகாரத்துக்கு வந்து விட்டார்கள். 1971 போருக்கு பின்னர் இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களை. இந்திரா காந்தி திருப்பி அனுப்பாமல் அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை வழங்கியதை கேள்வி எவரும் கேட்கவில்லை. ஊடுருவிய முஸ்லிம்களால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பொருளா தாரத்திற்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. இதை மம்தா புரிந்து கொண்டாரா என தெரியவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவிய பங்களா தேஷ், மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களில் ஒரு பிரிவினர், பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்துல் முஜாஹிதீன் பங்களா தேஷ், பாகிஸ்தான் தலிபான் போன்றவற்றுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அல்-நாசூரா என்ற முஸ்லிம் அமைப்பு ஊடுருவிய இஸ்லாமியர்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்து கொண்டு இருக்கிறது.
மம்தா ஆட்சியில் தான் அதிக அளவில் எல்லையில் மதரஸாக்கள் உருவாகின. இந்த மதரஸாக்களுக்கு மானிய உதவி அளித்ததும் மம்தாவின் ஆட்சியில் தான். ஆகவே பயங்கரவாதிகளுக்கு பால் ஊற்றி வளர்க்கிற நோக்கம், கேவலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள!