பணிந்த நேபாளம்

சீனா தன்னை சுற்றியுள்ள அண்டை நாடுகள் அனைத்தின் எல்லையையும் ஆக்கிரமித்துள்ளதுடன் மேற்கொண்டும் ஆக்கிரமிப்பு செய்து வருவது உலகறிந்த ரகசியம். சீனாவின் சமீபத்திய எல்லை ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நம் பாரதம் எதிர்த்ததுடன் அவர்கள் ஏற்கனவே கைப்பற்றிய போர் முக்கியத்துவமுள்ள நமது சில பகுதிகளை மீட்டுள்ளது. இதை எதிர்பாராத சீனா, நேபாள பிரதமர் ஒலியை கைக்குள் போட்டுக்கொண்டு நம் எல்லைகளான காலாபாணி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளை, நேபாள பகுதியாக காட்ட முயன்றதுடன் நேபாளத்தின் சில கிராமங்களையே ஆக்கிரமித்தது.

நேபாள மக்கள் என்றும் போல பாரதத்தின் பக்கம் இருந்தனர். சீன ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். நேபாளம் சீனாவை போல தேர்தல் இல்லாத சர்வாதிகார நாடு கிடையாது என்பதால் தேர்தலில் மண்னை கவ்வும் சூழல் ஏற்படும் என உணர்ந்தார் பிரதமர் ஒலி. நமது 27 அக்டோபர் விஜயபாரதம் மின்னிதழில் ‘ஒலி மாறியது உண்மையா’ எனும் செய்தியில் முன்னரே குறிப்பிட்டது போல, பாரதத்தின் ‘ரா பிரிவு’ அதிகாரி சமந்த் குமார் நேபாள பிரதமர் சர்மா ஒலியை சந்தித்தார். பின்னர், பழைய நேபாள வரைபடத்தை வெளியிட்டதுடன், விஜயதசமி வாழ்த்து,, ஐ நா சபையில் பாரதம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து என வாழ்த்து மழை பொழிந்தார். இதன் தொடர்சியாக நமது ராணுவ தளபதி நரவானே அங்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். அவருக்கு பாரம்பரிய வழக்கப்படி அந்நாட்டு கவுரவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

உண்மையான நட்பு நாடு எது என்பது தற்போது நேபாள அரசியல்வாதிகளுக்கு புரிந்திருக்கும்.