நமது பூவுலகின் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பல காரணிகளில் பிளாஸ்டிக் முதன்மையானதாக மாறிவருகிறது. பிளாஸ்டிக் மக்குவதில்லை என்பதுதான் இதற்கு காரணம். நம் பயன்படுத்திய பிறகு தூக்கி எரியும் பிளாஸ்டிக்கால் மண்ணில் மழைநீர் இறங்குவதில்லை. இதனால் வருடம்தோறும் தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. கழிவுநீர் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டு ஆரோக்கியம் சீர்கெடுகிறது. இவற்றை தெரியாமல் உண்ணும் விலங்குகள், பறவைகள், மீன்கள் ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு இறக்கின்றன. உணவு சங்கிலிக்கு பிளாஸ்டிக் பெரிய அச்சுறுத்தலாகிறது என அதன் தீமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
“பரியாவரன்” எனும் சுற்று சுழலுக்கான அமைப்பு பசுமை கற்களை அறிமுகப்படுத்தி, அதை மக்களிடம் கொண்டுசெல்லும் செயல் திட்டம் ஒன்றை உருவாகியுள்ளது. நிர்பந்தம் காரணமாக பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம், ஆனால் அதற்குப்பின் அதை பூமியில் வீசி எறிய வேண்டாம். ஒரு காலியான பிளாஸ்டிக் பாட்டிலில் ஈரமிலாத பிளாஸ்டிக் தாள்கள், துணுக்குகளை அடைத்து பசுமை கற்களை உருவாக்கலாம். ஒவ்வொரு பாட்டிலில் சேகரமாகும் 400-, 500 கிராம் கழிவுகளால் 100 சதுர அடி மண்ணை நாம் மாசுபடாமல், காக்கலாம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் தாய்மார்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் இதில் ஈடுபட்டு டிசம்பர் இறுதிக்குள் ஒரு லட்சம் பாட்டில்கள் தயார் செய்யலாம். இதனால் சுமார் 30 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை காப்பாற்ற நாம் உறுதி ஏற்போம். இந்த பசுமை கற்களை கொண்டு நாம் மதில் சுவர்கள், நடைபாதைகள், மேசை, நாற்காலிகள் போன்ற பொருள்களையும் உருவாக்கமுடியும்.
மேலும் விவரங்கள் அறிய: www.ecobrick.tn.in / 9884566502 / 96777 63576