கடந்த வாரம் ஜூன் 17ம் தேதி, திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டையில் உள்ள பாலபாக்யா அரங்கில் தேசிய சிந்தனைப் பேரவையின் சார்பில் காலையில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் சென்று, வாஞ்சி படத்துக்கு மரியாதை செய்து, அருகே உள்ள நினைவு மண்டபத்தில் வாஞ்சிக்கான புகழஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மாலையில் நெல்லை, வண்ணார்ப்
பேட்டையில் படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம் மற்றும் தேசிய சிந்தனைப் பேரவையின் நிகழ்ச்சி நடை
பெற்றது. ஜூன் 17 வாஞ்சி நினைவு நாளில் வாஞ்சியைக் குறித்தும், ஆபரேஷன் சிந்தூரில் நம் ராணுவத்தினரின் புத்திசாலித்தனமான செயல்பாடுகளுக்கு பாராட்டும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பாளையங்கோட்டை தமிழ் முழக்கப் பேரவையின் தலைவர் சு.செல்லப்பா தலைமை
யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரக்ஞா பிரவாஹ் தென்பாரத அமைப்பாளர் சு.விஸ்வ
நாதன் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கி, பாரத அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகை
யாளர்கள், கலைஞர்கள் அனைவரும், ‘நெல்லை படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற பெயரில் 17.06.2025 அன்று நெல்லையில் கூடி, ஒருமித்த குரலில் வெளியிடும் பிரகடனம் இது…
தீர்மானம்- 1:
முப்படைகளுக்கு வீரவணக்கம்!
ஜம்மு–-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடத்திய மனிதத்
தன்மையற்ற துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாவுக்கு வந்த 26 அப்பாவி பாரதியர்கள் கொல்லப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தருணத்தில், பாரதத்தின் மீதான பகையை கைவிட்டு, சொந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்துமாறு பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். பாரத ஒருமைப்பாட்டைக் குலைக்கும் சதிகள் எதுவும் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதை அந்நாட்டுக்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பதிலடி நடவடிக்கை பாரத ராணுவத்தின் வெற்றித் திலகமாக மிளிர்கிறது. நமது முப்படைகளின் நிகரற்ற வீரத்துக்கும், மக்களாட்சியின் மாண்புக்குக் கட்டுப்பட்ட அதன் சீரிய செயல்திறனுக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் காணிக்கை ஆக்குகிறோம்.
தீர்மானம்- 2:
மத்திய அரசுக்கு வேண்டுகோள்
ஜம்மு –காஷ்மீரில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு நமது அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக தகுந்த பதிலடி கொடுத்திருப்பதைப் பாராட்டுகிறோம். நாட்டுக்குச் சவாலான இந்தக் காலகட்டத்தில் நமது அரசியல் வேற்றுமைகளை மறந்து, அரசுக்கும் ராணுவத்துக்கும் உறுதுணையாக நிற்பது குடிமக்கள் அனைவரின் பொறுப்பாகும்.
தேசிய ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் விதமாக, காசி சங்கமம், சௌராஷ்டிர சங்கமம் நிகழ்வுகள் போல ‘காஷ்மீர் சங்கமம்’ நிகழ்வை ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதேபோல, ஏப்ரல் 22ம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!வந்தேமாதரம்!