மருத்துவ படிப்பிற்காக 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை மொத்தம் 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதில் தமிழகத்திலிருந்து 84,214 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீர் தேர்வுக்காக, பாரதத்திலேயே மகாராஷ்டிராவில் இருந்துதான் 1.5 லட்சம் பேர் என அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் இருந்து 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 84,214 மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என கூறி தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தி.மு.க அரசு அதற்காக இதுவரை தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி நாடகமாடி வருகிறது. நீட்டை இவர்களால் எந்த காலத்திலும் ரத்து செய்யமுடியாது என்பதை தமிழக மாணவர்கள் நன்றாக உணர்ந்துவிட்டனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. neet.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.