நிலைமை கைமீறியதால் அச்சத்தில் முழிக்கின்றது சீனா

நடந்திருக்கும் சம்பவத்தை அடுத்து சீனா ஒருவித அச்சத்திலும் குழப்பத்திலும் இருப்பதாகவும் பீஜீங் தன் 70 வருட சரித்திரத்தில் இது புதிது என சந்தேகித்திருப்பதாகவும் சில செய்திகள் வருகின்றன‌. நிலமை கைமீறி போனதை அடுத்து சீனா லடாக்கில் இருந்து கொஞ்சம் பின் வாங்கியிருக்கின்றது அதே நேரம் இந்திய படைகளும் பின் வாங்கியிருக்கின்றன‌. சீன அதிர்ச்சிக்கு காரணம் ஏராளம் முதலாவது இதற்கு தாங்கள் உத்தரவிடவில்லை என்றும், சீன ராணுவத்தின் உயர்மட்ட முடிவின்படி அவர்கள் நள்ளிரவில் ஊடுருவவில்லை என்றும் வேறு எங்கோ குழப்பம் நிகழ்ந்திருப்பதாகவும் அது சந்தேகிக்கின்றது. ஆம் கொரோனா என்பது அமெரிக்காவினை முடக்க சீனா வெளியிட்ட ஆயுதம் என்பதும், அமெரிகாவில் பற்றி எரியும் இனகலவரத்தின் பின் அந்நிய சக்திகள் இருப்பதாகவும் மனமார நம்புகின்றது அமெரிக்கா. நிச்சயம் அமெரிக்காவுக்கு எதிரிகள் அதிகமெனினும் யார் எதை செய்தார்கள், செய்கின்றார்கள் என்பது அவர்களுக்கு தெரியாததல்ல‌. கொரோனா சம்பவத்தையும் அதற்கு அடுத்ததான கலவரங்களையும் யாரோ இயக்குவதாக நம்பும் அந்நாடு இச்சம்பவம் பேர்ள் ஹார்பர் தாக்குதல் , கென்னடி கொலை, இரட்டை கோபுர தகர்ப்பு என தன் தன்மானத்தில் விழுந்த அடியாகவே கருதுகின்றது. ஹாங்காங்கில் நிலமை தீவிரம் அடைய அடைய அமெரிக்காவிலும் சில காட்சிகள் நடப்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம் முன்னதாக சீன போனுக்கு தடை, சீன‌ பயணிகளுக்கு தடை, சீன மாணவர்களுக்கு தடை என எதையோ மறை முகமாக செய்யும் அமெரிக்கா சில விஷயங்களை உணர்ந்திருப்பதை ஊகிப்பது ஒன்றும் சிரமமல்ல. இப்படி ஒரு கோணம் இருப்பதும் இது உலக அரங்கில் விவாதிக்கபடுவதும் சமீபத்திய நிகழ்வுகள் இந்நிலையில் மிக வலிமையான சீன ராணுவத்தின் ஒரு பிரிவு, கட்டுபாடு மிக்க சீன ராணுவத்தின் ஒரு பிரிவு இந்திய எல்லையினை கடந்து வம்பு சண்டை இழுத்திருப்பதுதான் சீனாவுக்கு அதிர்ச்சி ஆம் ஹாங்காங்கில் கூட அத்துமீறா ராணுவம், தைவானில் அத்துமீறா ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறுவது என்பதும் அரசு உத்தரவிடா நிலையில் போர்கோலம் பூண்டார்கள் என்பதும் சீனாவுக்கே குழப்பம் ஆக சீனாவுக்கு சிக்கலை உண்டாக்கவும், அந்நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தவும் சீன ராணுவத்திலும் சீன அதிகார மட்டத்திலோ ஒரு மர்ம கரம் புகுந்துவிட்டதை உணர்ந்த சீனா, நேற்று நடந்த சம்பவத்தில் மிக பாதிப்புகுள்ளாகிவிட்டது ஆம், போர் என்பது சாதாரணம் அல்ல, சீனா இப்பொழுது ஒரு போரில் இறங்கினால் அது சந்திக்கும் இழப்புகளும், அதன் பொருளாதாரத்தில் விழும் அடியும் கொஞ்சமல்ல, அந்த யானையினை சேற்றில் இறக்கி கொத்தி கொல்ல எதிர்பார்க்கும் சக்திகள் அதிகம். அவசரமாக பீஜிங்கில் அடைக்க பட்ட கதவுக்கு பின் கத்தி கொண்டிருக்கின்றார் ஜின்பெங், அவர் முன்னால் அதிகார மையங்கள் தலைகுனிந்து கொண்டிருக்கின்றன‌ ஆம் இது பாகிஸ்தான் தீவிரவாதிகள் முன்பு செய்த சாயல் பாகிஸ்தான் சீருடையில் இந்தியாவுக்குள் நுழைவார்கள், இந்தியாவும் பாகிஸ்தானும் அடித்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கொடுமையான திட்டம் இப்பொழுது சீனாவும் இந்தியாவும் மோதவேண்டும், சீனா களத்துக்கு வந்து சிக்க வேண்டும் என திட்டமிட்ட சக்தி ஒன்று காரியத்தை செய்துவிட்டதை உணர்ந்த சீனா அமைதியாக பல்லை கடித்தபடி தலைகுனிந்து நிற்கின்றது இல்லாவிட்டால் இந்நேரம் சீனாவின் டாங்கிகளும் சீனாவின் போர் விமானங்களும் எல்லையில் ருத்திர தாண்டவம் ஆடியிருக்கும் நிலமை தங்களை மீறிய விஷயம் என்பதால் அச்சத்தில் ஒருமாதிரி முழிக்கின்றது சைனா அடுத்து எவன் தைவானில் வம்பிழுப்பானோ, ஜப்பான் பக்கம் வியட்நாம் பக்கம் இப்படி வம்பிழுத்தது பிணமாய் வருவானோ என குழம்பி எல்லை முழுக்க தன் ராணுவத்தை கொஞ்சம் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டது அந்நாடு மகா வலிமையான சீன ராணுவம் குழம்ப ஆரம்பித்திருகின்றது, சர்வ வல்லமை பொருந்திய சீன தலமை என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்து நிற்கின்றது. இரு நாடுகளும் அமைதியாக நிற்க இதுதான் காரணம், இது ஒன்றுதான் காரணம் எனினும் இந்திய பகுதியின் ஒரு அங்குலத்தையும் இந்தியா விட்டுகொடுக்காது என்பதை உலகம் புரிந்திருக்கின்றது. எந்த கறுப்பு ஆடு நம் அதிகார பீடத்தில் புகுந்து குழப்புகின்றது என தெரியாமல் மல்லாக்க கிடந்து குழம்பி கொண்டிருக்கின்றது சீனா, அதை கண்டறிவது அவ்வளவு சுலபம் அல்ல‌ காரணம் அவர்களுக்கு எதிரிகள் அதிகம், உளவு விவகாரங்களில் அனுபவம் மிக மிக குறைவு.