நிறைவேறியது சட்டம்

கர்நாடக சட்டசபையில் மதமாற்ற தடை மசோதா நிறைவேறியது. மதமாற்றத் தடைசட்டத்தை நிறைவேற்றிய 9வது மாநிலம் கர்நாடகா. சட்டம் அமலான பிறகு, வேறு மதத்திற்கு மாற விரும்பும் நபர், இரண்டு மாதங்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும். மதமாற்றத்தை மேற்கொள்பவர் ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மதமாற்றத்தின் அடிப்படையான நோக்கம் குறித்து காவல்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும். அதிகாரிகளுக்குத் தெரிவிக்காவிட்டால் மதம் மாறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபரதாமும், மதமாற்றம் செய்பவர்களுக்கு ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். மதம் மாறினால் அவர்களின் அடிப்படை ஜாதி மூலம் கிடைக்கும் சலுகைகளை இழப்பார்கள். ஆனால், சேரும் மதத்தின் சலுகைகளை பெற முடியும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.