டாக்டர் லஜ்பத்ராய் மெஹரா நியூரோதெரபி என்கிற மருந்தில்லா மருத்துவம் கண்டு பிடித்தவர். பாரதம் முழுவதும் லட்சகண்கானோர் இந்த எளிய சிகிச்சை முறை மூலம் பலவித நோய்களிலிருந்து குணமாகி பயன் பெற்றுள்ளனர். இந்த சிகிச்சையை எல்லோருக்கும் எளிதில் பயிற்றுவிக்கும் பொருட்டு அதற்கான பாடத் திட்டத்தை வடிவமைத்து, டாக்டர். லஜ்பத்ராய் மெஹரா நியூரோதெரபி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை ஆரம்பித்தார். தற்போது 650 சிகிச்சை மையங்கள் பாரதம் முழுவதும் உள்ளன. கனடா, லண்டன், இத்தாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சிகிச்சை மையங்கள் உள்ளன. பலருடைய வாழ்க்கையிலும் நியூரோதெரபி ஒளியேற்றி உள்ளது. டாக்டர் லஜ்பத்ராய் மெஹரா, சங்கத்தின் சர்கார்யவாஹ் மானனீய ஸ்ரீ சுரேஷ் ஜோஷி உட்பட மூத்த அதிகாரிகள் பலருக்கும் பரிச்சயமானவர். தமிழ்நாட்டில் சேவாபாரதியின் தொண்டுப் பணிகளில் ஒன்றாக நியூரோ தெரபி சிகிச்சை மையங்கள் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
– பிரேமா மோகன்