ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர் கொண்டது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷினை வென்றிருந்த நிலையில் இந்த ஆட்டத்தில் வென்றால் அரை இறுதி வாய்ப்புக்கு தகுதி பெரும் நிலையில் மிகுந்த உற்சாகத்துடன் நியூசிலாந்தை சந்தித்தது இந்திய அணி. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய கூறியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி ஸபாலி வர்மா, ஸ்ம்ருதி மந்தானா தொடக்க வீரராக களம் இறங்கினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்தியா தரப்பில் ஷிபாலி வர்மா அதிகபட்சமாக 46 ரன்களும் தனியா பாட்டியா 23 ரன்களும் ஸ்ரும்தி மந்தனா 11 ரன்களும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10 ரன்களும் ஸிகா பாண்டே 10 ரன்களும் ராதா யாதவ் 14 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ரோஸ் மேரி அமிலியா ஜெம் 2 விக்கெட்களையும் சோப்பின் டிவைன் ,லியா தகுகி, லெஸ் காஸ்ட்ரோக் தலா ஒரு விக்கெட்டியும் வீழ்த்தினார் இந்திய தரப்பில் ஒட்டுமொத்தமாக 133 ரன்களை எடுத்தனர்.
நியூசிலாந்தை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்திய மகளீர் கிரிக்கெட் அணி
அடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியதும் அந்த அணி தரப்பில் ரெய்ச்சல் பிரிஸ்ட் 12 ரன்களையும் சோபின்டி வைன் 14 ரன்களையும் ,சுசி பேட்ஸ் 6 ரன்களையும், மேடி கிரீன் 24 ரன்களையும் காடேய் மார்ட்டின் 25 ரன்களையும் அமிலியா கெர் 34 ரன்களையும் ஹெயிலி ஜென்சன் 11 ரன்களையும் எடுத்து கடைசி மூன்று ஓவர்களில் சற்று அதிரடியாக விளையாடிய நியூசிலாந்தின் வீராங்கனைகள் வெற்றியை தட்டி பறித்து விடுவார்களோ என்று என்னும் அளவுக்கு அபாரமாக விளையாடினர். நியூசிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையான நிலையில் கடைசி ஓவரை வீசிய சிக்கா பாண்டே அபாரமாக பந்து வீசி 11 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார் அதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா, சிகா பாண்டே, ராஜேஸ்வரி ஹெய்க்வாட், பூனம் யாதவ், ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே சென்ற முறை சுற்றுப் பயணத்தின் போது நியூஸிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் தோற்று போன இந்திய அணி அந்த தோல்விக்கு பழி தீர்த்து கொண்டது.