பிரதமர் மோடி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் வாராணசியில் அமைந்துள்ளது. அதனை விற்பனை விளம்பர வலைத்தளமான ஓஎல்எக்ஸில் பிரதமர் நரேந்திர மோடியின் வாராணசி அலுவலகம் விற்பனைக்கு உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 4 அறைகள் மற்றும் 4 குளியலறைகள் கொண்ட 6,500 சதுர அடி பரப்பளவு கொண்ட நரேந்திரமோடியின் அலுவலகம் ரூ.7.5 கோடிக்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தை நீக்கிவிட்டு உத்தரப்பிரதேச காவல்துறையினர் அதனைப் பதிவிட்ட 4 பேரை கைது செய்தனர்.