நடிகர் விசு நமது நினைவில்

இயக்குனர் கதாசிரியர்  வசனகர்த்தா நடிகர் என  பன்முக தன்மை கொண்ட விசு அவர்கள் நேற்று மரணம் என்ற செய்தி நம் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது..ஆர் எஸ் எஸ் ஹச் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக நடைபெறும் வருடாந்திர இரத்த தான நிகழ்ச்சிக்கு வருஷாவருசம் கலந்துகொண்டு சிறப்பிக்கும் முக்கிய நபர் . நமது மறைந்த பிரச்சாரகர் ஸ்ரீ உத்தமராஜ்க்கு மிகவும் நெருக்கமான பழக்கம் கொண்டவர் அவர் ஓட்டிவந்த பஜாஜ் எம் 80 வாகனத்தை திரு விசு அவர்களே வாங்கி கொடுத்ததாக ஞாபகம் அந்த அளவுக்கு விசுவுடன் நைனா என்றழைக்கப்பட்ட உத்தமராஜ்ஜி பழக்கம் வைத்திருந்தார் சங்க கார்யகர்த்தார்கள் ஏபிவிபி பாஜக அமைப்பிகளுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்தவர் . பிரபலமான சன்  டீவி யில் அரட்டை அரங்கம் என்ற பெயரில்  மக்களுக்கு  நல்ல  பண்புகளை விதைக்கும் நிகழ்ச்சி நடத்தியவர். அந்த நிகழ்ச்சியை வாரா வாரம் மக்களே ஆவலோடு பார்பதற்காகக் எதிர்பார்த்து  காத்து கொண்டிருக்கும் அளவுக்கு ரசிகர்களின்  ஆவலை தூண்டியவர் . அந்த நிகழிச்சியில் அரசியல் கண்ணோட்டத்தோடு சில தேவையற்ற விஷயங்களை சன் டிவி நிர்வாகம் திணிக்க முயன்ற போது அதனை எதிர்த்து வெளியேறி மீண்டும் எதிர்தரப்பு ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் என்ற பெயரில் நிகழ்ச்சியை முன்பை விட உற்சாகமாக பல ஆண்டுகாலத்திற்கு நடத்தி காட்டியவர் .

         தமிழ் சினிமாவில்  வழக்கமான மசாலா  படங்களை  தவிர்த்து குடும்பத்தை மையமாக வைத்து பல அற்புதமான படங்களை தரமுடியும் என்பதனை நிரூபித்தவர். சம்சாரம் அது மின்சாரம் ,திருமதி ஒரு வெகுமதி, குடும்பம் ஒரு கதம்பம் என்று பல படங்களை தந்தவர் அதில் வசனகங்களும் கதை அமைப்பும் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் அமைத்தவர் .அவரும் அவரது தம்பியான காலம்சென்ற கிருஷ்ணமூர்த்தியோடு இனைந்து பல்வேறு வெற்றி படங்களை தந்தவர். எப்படி பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான விசு அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி மனதை கலங்க செய்தது. கடைசிகாலகட்டத்தில் வீட்டிலேயே   அமைதியாக ஓய்வில் இருந்தார் சிறுநீரக தோற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 22/03/2020 காலமாகிவிட்டார்

        விஜய பாரதம் 2004ம் ஆண்டு தீபாவளி மலருக்காக அவரிடம் பேட்டி கேட்டிருந்தோம் அவரும் தருவதாக சொல்லி இருந்தார் பலநாட்கள் ஒடி விட்டது. அவரும் சினிமா அரட்டைஅரங்கம் என்று எப்போதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருந்த நேரம் . திடீரன்று ஒருநாள் அவரிடம் பேட்டி குறித்து ஞாபகப்படுத்திய போது என்று பைனல் செய்து பிரிண்ட் அனுப்புவீர்கள் என்று கேட்டார். ஏற்கனவே நேரம் நெருங்கிவிட்டது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கிடைத்தால் நல்லது என்று சொன்னேன் அதற்கு அவர் இரண்டு மூன்று நாட்களும் நான் சென்னையில் இல்லை என்றாலும் நான் வாக்கு கொடுத்தால் முடிக்க வேண்டும் . எனவே நீங்கள் என்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளை எழுதி எனக்கு அனுப்புங்கள் அதற்கான பதிலை எழுதி நான் அனுப்பிவிடுகிறேன் அது உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று சொன்னார். நாங்களும் அதனை செய்தோம் கேள்வி அனுப்பிய இரண்டாவது நாள் பதில்கள் அலுவலகத்துக்கே வந்து சேர்ந்தது. மிகவும் சிறப்பாக இரத்தின சுருக்கமாக நன்றாக திரும்ப திருத்தம் செய்ய வேண்டிய வேலை இல்லாமல்  இருந்தது . அந்த வருட தீபாவளிமலரில் அதுதான் சிறப்பாக பேசப்பட்டது . எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல மனநிறைவையும் புதிதாக திருமணமாகி தலை தீபாவளி  கொண்டாடிய தருணத்தில் உறவினர்களாலும் சிறப்பாக பேசப்பட்டது. அந்த பேட்டியை  அவரது நினைவாக அந்த பேட்டியை கீழே தந்துள்ளேன்
 ஒரு நல்ல ஆத்மா   நற்பணிகளை செய்து வீடுபேறு முடிந்திருக்கிறது இறைவனின் திருவடியில் இளைப்பாறும் அவரது ஆத்மாவிற்கு நற்கதி அடைய பிரார்த்திப்போம்