நக்சலைட் கைது

சத்தீஸ்கரின் எல்லையை ஒட்டியுள்ள மத்திய பிரதேசத்தின் பாலகாட், மாண்ட்லா மாவட்டங்களில், கம்யூனிச நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிக்க விரும்புகின்றனர். எனினும், காவல்துறையின் இடைவிடாத விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக  அவர்களின் திட்டங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த புதன் கிழமை அன்று பால்காட் மாவட்டம் ஜெய்ராசி கிராமத்தில் நக்சலைட்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கத்தியா மோச்சா பிரிவை சேர்ந்த முக்கிய நக்சலைட் சந்தீப் என்ற லகு குஞ்சம் என்ற முக்கிய நக்சலைட் கைது செய்யப்பட்டான். அவனது மற்ற நான்கு கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பினர். சத்தீஸ்கர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் 100 மாவோயிஸ்டுகள் பாலகாட், மாண்ட்லா காடுகளுக்குள் பதுங்கியிருக்கலாம் என உளவு அமைப்புகள் கடந்த ஜனவரி மாதத்தில் தெரிவித்துள்ளன.