எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது அறிக்கையில், ‘ஏச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க… ஐயா எண்ணிப் பாருங்க’ என்ற எம்.ஜி.ஆர் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகின்றது. ஏமாறுவதற்கு ஆள் இருக்கின்றவரை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்ற கொள்கையின் அடிப்படையில், திமுக-வின் விடியா அரசு செயல்படுகிறது. இந்தஆட்சியின் 100 நாள் செயல்பாடுகளிலேயே ஏமாற்றம் அடைந்த மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால், 5 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள், அந்த கடன் தள்ளுபடி சலுகை பலருக்கு கிடைக்கக் கூடாது என்று என்னும் அளவுக்கு, 2018 முதல் 2020 வரையிலான கடன் மட்டுமே தள்ளுபடி, மத்திய மாநில அரசு ஊழியராக இருக்கக் கூடாது, வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது, ஆண்டு வருவாய் ஒரு லட்சத்திற்குமேல் இருக்கக் கூடாது, கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியக் கூடாது, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதிக்க செய்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன’ என கூறியுள்ளார்.