தொடரும் கோயில் சூறையாட்டம்; நாடகமாடும் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டத்தில் சுமார் 500 வருட பழமையான கோதண்ட ராமர் கோயில் ராம தீர்த்தம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த அற்புதமான கலைநயம் மிக்க சிலைகளை தகர்த்தெறிந்து அதன் பாகங்களை அருகிலுள்ள குளத்தில் கொண்டு போட்டுள்ளார்கள். இந்த விவகாரம் தற்போது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆனபிறகு தொடர்ந்து அங்குள்ள கிறிஸ்தவ மிஷினெரி அமைப்புகள் தங்களது மதமாற்ற வேலைகளை அதி தீவீரமாக்கியுள்ளது. மக்களை அரசு உதவியுடன் கட்டாயப்படுத்தி மதமாற்று பணிகள் எல்லாம் கண ஜோராக நடைபெற்று  வருகிறது.

சமீபத்தில் ஒரு கோயிலின் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடி மதமாற்றம் செய்யும் நிகழ்வை தைரியமாக எதிர்க்கும் பூஜாரியை போயா உன்வேலையை பார்த்துக்கொண்டு, நாங்கள் அப்படித்தான் செய்வோம் எங்கு வேண்டுமானாலும் புகாரளித்துக்கொள். என்று தைரியமாக கிறிஸ்தவ   மிஷினெரி நபர் குறித்த வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கிறிஸ்தவ பாதிரிகளுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கும் திட்டம், அவர்களுக்கு மாவட்டம் தோறும் மாளிகை கட்டும்   திட்டம், கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் அரசு நிதியுதவி. ஜெருசலம் செல்ல நிதியுதவி என்று அவரது தந்தை தயங்கி தயங்கி செய்ததை எல்லாம்  தாராளமாக தைரியமாக செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் வெற்றிக்காக மீண்டும் இந்துவாக மாற்றிவிட்டார் என்ற போலியான பொய்யுரையை நம்பி வாக்களித்த இந்துக்களுக்கு நல்ல புத்தி புகட்டியுள்ளார். மதம்மாறிய ஒருவர் எப்படியென்றாலும்  அப்படித்தான் இருப்பான் ஒன்று தைரியமாக அதனை பின்பற்றுவான். அல்லது க்ரிப்ட்டோக்களாக வாழ்ந்து வருவான். வெளியில் ஒன்றாகவும் உள்ளே ஒன்றாகவும் நடித்து கொண்டிருப்பான் அதனைத்தான் கிறிஸ்துவரான ஜெகன் மோகன் ரெட்டி செய்துவருகிறார்.

ஏற்கனவே அவரது சித்தப்பாவான விவேகானந்த ரெட்டியை கொலை செய்த வழக்கில் இவரது  குடும்பத்தினரது பெயர் அடிபடுகிறது. அவரது குடும்பத்தில் தைரியமாக மதம் மாறாமல் இந்துவாக இருந்த ஒரே நபர் அந்த விவேகானந்த ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது மற்றொரு சித்தப்பாவான சுப்பா  ரெட்டியை   திருப்பதி ஏழுமலையானின் தேவஸ்தானத்துக்கு  தலைவராக நியமித்துள்ளார். அவரது மனைவி கையில் எப்போதும் பைபிளை கையில் வைத்துக்கொண்டு இருக்கும் ஒரு கிறிஸ்தவர். அவரை வைத்து நானும் இந்து தான் என்று சொல்லி தலைவர் பதவியை ஏற்க செய்துள்ளனர். ஏற்கனவே  ஒய் சாமுவேல் ராஜசேகர ரெட்டி செய்த கோல்மால் வேலைகளால் திருப்பதிமலையை அபகரிக்க முயன்றது. போன்ற பிரச்சனைகளால் அகால மரணத்தில் முடிந்தது நினைவிருக்கட்டும், ஆட்சி அதிகாரம் எல்லாம் எனது கையில் என்ற அதிகார மமதை கொண்டால் என்னவாகும் என்பதை வெளியில் போய் தெரிந்து கொள்ள வேண்டாம். உங்கள் வீட்டில் இருந்தே புரிந்து கொள்ளலாம். ஒரு பொறுப்பான முதல்வர் பதவியில் உள்ள ஒருநபர் பெரும்பான்மை மக்களில் வழிபட்டு இடங்கள் தகர்க்கப்படும் போது ஏதோ மூன்றாம் நபரை  போன்று காலம் கெட்டுவிட்டது, கலி  முத்திவிட்டது என்று புலம்பல் நாடகத்தை நடத்துகிறார். இதே போன்ற ஒரு நிகழ்வு ஏதாவது சர்ச்சில் நடந்து இருந்தால் இதே போன்று பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா பாய்ந்து குதறி எடுத்து இருக்கமாட்டாரா? என்ன செய்து கொண்டிருக்கிறார் முதல்வர்.

ஏற்கனவே கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பழமையான அந்தர் வீதியில் ஆலய தேர் இரவோடு இரவாக தீக்கிரையாக்கப்பட்டதை தொடர்ந்து கடப்பா குண்டூர் மேற்கு கோதாவரி கர்னூல் விஜயவாடா என பல்வேறு மாவட்டங்களில் கோயில் சிலைகளை இடிப்பது தீவைத்து கொள்ளையடிப்பது போன்ற செய்யல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தீவீரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர் நடப்பது நல்லதே என்று தங்களின் எஜமானர்கலின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொள்கிறாரோ? என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பாஜக போன்ற கட்சிகள்  இந்த செயலை கடுமையாக கண்டித்தும் எந்த நடவடிக்கை இல்லாமல் இருந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கோயிலை பார்வையிட உள்ளார் என்றதும் அவசர அவசரமாக உள்ளூர் எம் எல் ஏவும், மந்திரியும் சென்று பார்வையிடுகிறார். பின்னர் அவசர அவசரமாக உளறல் அறிக்கை வெளியாகிறது.  சர்ச் தாக்கப்பட்டால் அலறும் மீடியாக்கள் முஸ்லீம் அடித்து கொல்லப்பட்டான் என்றால் முன்னின்று புலன் விசாரணை செய்து தீர்ப்பெழுதும் பத்திரிக்கைகள். தொடர்ந்து இந்து கோயில்கள்  அவமானப்படுத்துதல் தீக்கிரை கொள்ளை என்று நடந்து விட்டபிறகு இந்துக்கள் இந்த அநீதிகளை கண்டு கொதித்தெழுந்ததும் இந்துக்களுக்கு அறிவுரை கூற வந்து விடுகிறது. மத பிரச்சனைகளை கொண்டு வந்து பதட்டத்தை ஏற்படுத்தாமல் மக்கள்  அமைதிக்காக கோருகிறது தமிழ் ஹிந்து பத்திரிகை. இதே பத்திரிக்கைதான் சர்ச் தாக்கப்பட்ட போது சகிப்பின்மை பற்றிப்பேசி ஹிந்துக்களுக்கு புத்தி போதித்தவர்கள் இதே மீடியாக்கள்தான். எங்கோ ஒருவன் மாடு திருடியதுக்கு தாக்கப்பட்டதை  ,அடித்து கொலை என்று தீவிரமாக பேசியவர்கள். சிறுபான்மை மதத்தினருக்கு எதாவது பிரச்னை வந்தால் ரத்தம். அதேபோன்று பிரச்னை பெரும்பாண்மை மதத்துக்கு வந்தால் தக்காளி சட்டினியா? ஜனவரி ஐந்து தேதியிட்ட   தமிழ் ஹிந்து கட்டுரையில் அயோத்தி பிரச்சனை தற்போதுதான் முடிந்துள்ளது. மீண்டும் தெற்கே ஒரு அயோத்தியை உருவாக்கிவிடாதீர்கள் என்று எழுதியுள்ளது. மக்களின் மீதானசமூக  அக்கறையில் அல்ல மாறாக  எங்கே  ஆந்திராவிலும் இதை சாக்காக வைத்து தெலுங்கானா போன்று பாஜக பலனைடைந்து விடுமோ என்ற அச்சத்தால் மட்டுமே.