ஐக்கிய நாடுகளின் சபை ஆரம்பித்து 75 ஆண்டுகள் ஆகிறது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆரம்பிக்கப்பட்ட 1945 முதல் அதில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏதும் இல்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.
காலத்திற்கேற்ப ஐ.நா சபையை மறுசீரமைக்க இதுவே நல்ல தருணம். ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இல்லை என்றாலும் ஐ.நா அமைதி ராணுவத்தில் பெரும் பங்களிப்பு, சிறந்த ஜனநாயக கட்டமைப்பு, அமைதியில் நாட்டம், ‘வசுதைவ குடும்பகம்’ கொள்கை, பயங்கரவாத எதிர்ப்பில் உறுதி, பிற நாடுகளுக்கு உதவும் மனப்பான்மை, வேகமான வளர்ச்சி என வீறுநடை போடும் பாரதம் இதில் நிரந்தர உறுப்பினராக வேண்டும். இதற்கு பெரும்பாலான நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
எல்லை ஆக்கிரமிப்பு, நாடு பிடித்தல், மக்களை கசக்கி பிழிவது, குறைந்த ஊதியம், சர்வாதிகாரம், மற்ற நாட்டு விஷயங்களில் தலையீடு, பயங்கரவாத பாகிஸ்தானை ஆதரிப்பது, பயங்கரவாதிகளை தன் ‘வீட்டோ’ அதிகாரத்தால் காப்பது, நோய் பரப்புதல், இணையத் தகவல் திருட்டு உள்ளிட்ட பல காரணங்களினால் சீனா தன் தகுதியை இழந்துள்ளது.
எனவே சீனாவை ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க உலக நாடுகளும், ஐ.நா சபையும் முடிவெடுக்க வேண்டும். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
ஐ.நா மறுசீரமைப்பில், பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதனால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான அனைத்து நாடுகளும் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும். உலகில் அமைதி செழிக்க வேண்டும்.