தேசியக் குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் – ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார்

அஸாம் மாநிலத்தில் மேற்கொண்டது போல் தேசிய குடிமக்கள் பதிவேடு ஹரியாணா மாநிலத்திலும் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்டார் கூறும்போது, “அஸாம் மாதிரியில் ஹரியாணாவிலும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறை அமல்படுத்தப்படும். என்.ஆர்.சி. விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பல்லாவிடம் நான் பேசினேன்” என்றார்.

இன்று முன்னாள் நீதிபதியும் முன்னாள் ஹரியாணா மாநில மனித உரிமைகள் ஆணையருமான பல்லாவை அவர் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தார்.

இதோடு, ‘சட்ட ஆணையம்’ ஒன்றை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.