தேசத்திற்காக நாம்…

ஸ்வயம்சேவகர்கள் பல்வேறு பிராந்தங்களில் ஆற்றும் அரும்பணிகள் பற்றிய ஊக்கமூட்டும் தகவல் தொகுப்பு. அகில பாரதிய பிரதிநிதி சபாவில் சர்காரியவாஹ் தத்தாத்ரேய ஹொசபளே அறிக்கையிலிருந்து: ஜோத்பூர் பிராந்தத்தில் 1,990 பகுதிகளில் நடைபெற்ற பதசஞ்சலன்களில் பங்கு கொள்வதற்காக சுமார் 86,000 இளைஞர்கள் சீருடைகளை வாங்கியுள்ளனர். போபால் நகரில் மட்டும் கல்லூரிப் பேராசிரியர்கள், தொழில் முனைவோர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், இளம் தொழில்முனைவோர்கள் என்று வகைப்படுத்தி திட்டமிடப்பட்டு பதசஞ்சலன் நிகழ்வுகளில் 2,917 ஸ்வயம்சேவகர்கள் பங்கு கொண்டார்கள். மத்திய பாரத் பிராந்த விஜயதசமி பதசஞ்சலன் நிகழ்வுகளில் 3 லட்சம் ஸ்வயம்சேவகர்களும் ஆதரவாளர்களும் பங்கு கொண்டனர்.